குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அரிய வகை பச்சை ரோஜா சீசன் தொடக்கம்

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துள்ள அரிய வகை பச்சை ரோஜாக்கள்.

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துள்ள அரிய வகை பச்சை ரோஜாக்கள்.

Updated on
1 min read

குன்னூர்: குன்​னூர் சிம்ஸ் பூங்​கா​வில் அரிய வகை பச்சை ரோஜா சீசன் தொடங்​கி​யுள்​ளது.

குன்​னூர் சிம்ஸ் பூங்கா அரிய வகை மரங்​கள் மற்​றும் மலர் செடிகளுக்​குப் பெயர் பெற்​ற​தாகும். பூங்​கா​வில் நூற்​றுக்​கணக்​கான அரிய தாவர இனங்​களு​டன் பல்​வேறு வண்​ணங்​களில் ரோஜா மலர்​களும் வளர்க்​கப்​பட்டு வரு​கின்​றன.

இந்​நிலை​யில், சிம்ஸ் பூங்​கா​வில் தற்​போது அரிய வகைபச்சை ரோஜாக்​களின் சீசன் தொடங்​கி​யுள்​ளது. மிக​வும் குறைந்த எண்​ணிக்​கை​யில் மட்​டுமே உள்ள இந்த ரோஜா செடிகள் பூந்​தொட்​டிகளில் வளர்க்​கப்​பட்டு பாது​காப்​பாக பராமரிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

தற்​போது பச்சை ரோஜா மலர்​கள் பூக்​கத் தொடங்​கி​உள்​ள​தால், அவற்றை சுற்​றுலா பயணி​களின் பார்​வைக்​காக விரை​வில் காட்​சிப்​படுத்த பூங்கா நிர்​வாகம் திட்​ட​மிட்​டுஉள்​ளது. அரிய வகை பச்சை ரோஜாக்​களை காண சுற்​றுலா பயணி​கள் ஆவலுடன் எதிர்​பார்த்​துள்​ளனர்​.

<div class="paragraphs"><p>குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துள்ள அரிய வகை பச்சை ரோஜாக்கள்.</p></div>
பிரபாஸ் நடிக்கும் ‘ஃபவுஜி’ டிசம்பர் 3-ம் தேதி ரிலீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in