

சென்னை: சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
விடுமுறை நாட்களில் 20 ஆயிரம் பேருக்குமேல் வருகின்றனர். இதேபோல, கிண்டி சிறுவர் பூங்காவுக்கும் ஏராளமானோர் வருகின்றனர். இந்த இரு பூங்காக்களும் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்படுவது வழக்கம்.
தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் மே மாதம் முழுவதும் இந்த இரு பூங்காக்களும் செவ்வாய்க் கிழமைகளிலும் திறந்திருக்கும் என்று வனத்துறை அறிவித்துள்ளது.