Published : 22 Mar 2023 05:23 AM
Last Updated : 22 Mar 2023 05:23 AM
புதுடெல்லி: மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2022-ல் நாட்டில் உள்ள ஆன்மிக சுற்றுலாத் தலங்கள் ரூ.1,34,543 கோடி வருவாய் ஈட்டியுள்ளன. இது 2021-ல் ரூ.65,070 கோடியாக இருந்தது.
கடந்த 2018-ல் இந்த வருவாய் ரூ.1,94,881 கோடியாகவும், 2019-ல் ரூ.2,11,661 கோடியாகவும் இருந்தது. ஆனால் கரோனா பெருந்தொற்று காரணமாக 2020-ல் ரூ.50,136 கோடியாக குறைந்தது.
2022-ல் யாத்ரீக தலங்களுக்குச் சென்ற உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 143.3 கோடியாக இருந்தது, அதேநேரம் 66.4 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 2021-ல், இந்த எண்ணிக்கை முறையே 67.7 கோடி மற்றும் 10.5 லட்சமாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT