சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ‘குதிரை தாலி கிழங்கு’ - கொடைக்கானல் போலீஸ் எச்சரிக்கை

குதிரை தாலி கிழங்கு.
குதிரை தாலி கிழங்கு.
Updated on
1 min read

கொடைக்கானல்: கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் ‘குதிரை தாலி கிழங்கை’ போதை வஸ்து என நினைத்து ஏமாற வேண்டாம் என மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். கொடைக்கானல் வனப்பகுதியில் இயற்கையாக விளையும் ‘மேஜிக் மஸ்ரூம்’ எனப்படும் போதைக் காளானுக்காக வரும் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிலர் சாதாரண காளானை காயவைத்து, சிறுசிறு துண்டுகளாக்கி போதை காளான் என்று விற்கின்றனர். சில நாட்களாக மலைப் பகுதியில் கிடைக்கும் ‘குதிரை தாலி’ எனும் ஒரு வகை கிழங்கை போதைப் பொருளாக இளைஞர்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கவுஞ்சி மலைக் கிராமத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் அந்த கிழங்கு குறித்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது குதிரை தாலி கிழங்கை சிலர் மூலிகை வைத்தியம் என்ற பெயரில் சுற்றுலா பயணிகளுக்கு தருவதும், அதை நுகர்ந்தால் ஒரு வித கிளர்ச்சியை ஏற்படுத்துவதும் தெரிய வந்தது. அதையடுத்து, அந்த கிழங்கின் தன்மை குறித்து தெரியாமல் சுற்றுலா பயணிகளுக்கு கொடுக்கக் கூடாது என போலீஸார் அறிவுறுத்தினர்.

இதுகுறித்து மதுவிலக்கு போலீஸார் கூறும்போது, கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இளைஞர் ஒருவர் உள்ளூர் வைத்தியரிடம் சளி, இருமல் நீங்க குதிரை தாலி கிழங்கை வாங்கி பயன்படுத்தியுள்ளார். இக்கிழங்கை போதைப் பொருள் என நினைத்து சுற்றுலா பயணிகள் ஏமாற வேண்டாம். இந்த கிழங்கின் தன்மை குறித்து ஆய்வுக்கு சென்னைக்கு அனுப்பி உள்ளோம் என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in