வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு 91,000 சுற்றுலா பயணிகள் நடப்பாண்டில் வருகை

வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு 91,000 சுற்றுலா பயணிகள் நடப்பாண்டில் வருகை
Updated on
1 min read

மதுராந்தகம்: செங்கை மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் ஏரியின் நடுவே பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு, ஆஸ்திரேலியா, சைபீரியா, பாகிஸ்தான் நியுசிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பறவைகள் ஆண்டுதோறும், சீசன் காலங்களாக கருதப்படும் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சரணாயலத்துக்கு வந்து ஏரியில் உள்ள மரக்கிளைகளில் கூடுகட்டி தங்கி, முட்டையிட்டு குஞ்சு பொறித்து மீண்டும் தாய்நாடு திரும்பி செல்கின்றன.

இந்நிலையில், நடப்பாண்டில் வேடந்தாங்கல் சரணாயலத்துக்கு வெளிநாட்டு பறவைகள் உட்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்து சென்றுள்ளன.பறவைகளை கண்டு ரசிப்பதற்காக 16,000 சிறுவர்கள், பெரியவர்கள் 75,602 பேர் மற்றும் வெளிநாட்டினர் 252 பேர் வந்து சென்றுள்ளதாக, சரணாலயம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, சரணாலயத்தில் 10 ஆயிரம் பறவைகள் மட்டுமே உள்ளன. எனினும், பறவைகளை கண்டு ரசிப்பதற்காக பள்ளி மாணவர்கள் தொடர்ந்து வந்து செல்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in