

கம்பம்: சுற்றுலாத் துறை சார்பில், கடந்த 27-ம் தேதி முதல் சாரல் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் தினமும் கண்காட்சி, பாரம்பரிய கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘சுருளி அருவியில் குளிக்க ரூ.30 கட்டணம் பெறப்பட்டது. தற்போது, சாரல் திருவிழாவுக்காக கட்டணமின்றி அனுமதிக்கப்படுகின்றனர். அக்.2-ம் தேதி வரை இந்த அனுமதி இருக்கும்’ என்றனர்.