கிருஷ்ணகிரியில் கனமழைக்கு 324 ஏரிகள் நிரம்பின : நீர்வழிப்பாதை ஆக்கிரப்பால் 145 ஏரிகள் வறண்டு கிடக்கின்றன

கிருஷ்ணகிரியில் பெய்த கனமழைக்கு கூரம்பட்டி ஏரி நிரம்பி உள்ளது.
கிருஷ்ணகிரியில் பெய்த கனமழைக்கு கூரம்பட்டி ஏரி நிரம்பி உள்ளது.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு 324 ஏரிகள் நிரம்பின என்று பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலு வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட் டத்தில் கடந்த ஒரு மாதமாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு குறித்து பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் 87 ஏரிகள் உள்ளன. இதேபோல் ஊரக வளர்ச்சித்துறையினர் பராமரிப்பில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை, ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், தளி ஆகிய 10 ஒன்றியங்களில் 1155 ஏரிகள் உள்ளன. விவசாய பாசனத்துக்காக 57 ஆயிரத்து 459 கிணறுகள் உள்ளன.

கடந்த ஒரு மாதமாக பரவலாக பெய்த கன மழைக்கு ஊரக வளர்ச்சித் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள 1155 ஏரிகளில் 267 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளது. 187 ஏரிகள் 75 சதவீதமும், 172 ஏரிகள் 50 சதவீதமும், 202 ஏரிகள் 25 சதவீதமும், 199 ஏரிகள் 25 சதவீதத்திற்கு கீழும் தண்ணீர் உள்ளது. 128 ஏரிகள் நீரின்றி வறண்டு காட்சியளிக்கிறது.

இதேபோல் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 87 ஏரிகளில், 57 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. 25 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள் 13 ஏரிகளில் தண்ணீர் உள்ளது. மேலும், 17 ஏரிகள் நீரின்றி வறண்டுள்ளது.

நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, ஏரிகள் தூர்வாரப் படாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏரிகள் நிரம்பிவில்லை எனவும், தென்பெண்ணையாற்றில் செல்லும் உபரிநீரை ஏரிகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏரிகள் தூர்வாரவில்லை

இதேபோல், மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்களுக்கு மின்மோட்டார் மூலம் தென்பெண்ணை ஆற்று நீரைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in