அவிநாசியை பொதுத் தொகுதியாக அறிவிக்க வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்

அவிநாசியை பொதுத் தொகுதியாக அறிவிக்க வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்
Updated on
1 min read

இதில் கலந்துகொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனித் தொகுதியாக உள்ள அவிநாசியை, வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலேயே பொதுத் தொகுதியாக அறிவிக்க வேண்டும். விசைத்தறியாளர்களின் வங்கிக் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் என்பதால் தத்தனூர், சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் தொழிற்பூங்கா அமைக்க அனுமதிக்கமாட்டோம். கர்நாடகா மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த சசிகலாவின் காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருப்பதை பார்த்தால், அதிமுகவில் உரிமை கொண்டாடுவார்போலவே தெரிகிறது. பாஜகவை அவர் எதிர்த்தால், அதிமுக தொண்டர்கள் சசிகலா பக்கம் வர வாய்ப்புள்ளது" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in