குஜராத்தி மொழியில் ஏஐ பேசுமா? - கண்காட்சியில் சர்வம் சிஇஓ-விடம் பிரதமர் மோடி கேள்வி

குஜராத்தி மொழியில் ஏஐ பேசுமா? - கண்காட்சியில் சர்வம் சிஇஓ-விடம் பிரதமர் மோடி கேள்வி
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள பாரத் மண்டபத்தில் நடை​பெறும் இந்​தியா ஏஐ உச்சி மாநாட்​டில் 600-க்​கும் மேற்​பட்ட நிறு​வனங்​கள் தங்​கள் புதுமை கண்​டு​பிடிப்பு பொருட்​களை காட்​சிக்கு வைத்துள்ளன. இவற்றை பார்​வை​யிட்ட பிரதமர் மோடி ஏஐ தொழில்​ நுட்​பத்​தில் தயா​ரான பொருட்​கள் குறித்து கேட்​டறிந்​தார்.

இது குறித்து சர்​வம் என்ற இந்​திய ஏஐ ஸ்டார்ட் அப் நிறு​வனத்​தின் சிஇஓ பிரத்​யுஷ் குமார் கூறிய​தாவது: இந்​தியா ஏஐ கண்காட்சியில், பிரதமர் மோடி ஒவ்​வொரு அரங்​க​மாக பார்வையிட்டு அங்​குள்ள பொருட்​கள் குறித்து கேட்​டறிந்​தது ஊக்கு​விப்​பதாக இருந்​தது. எங்​கள் நிறுவன அரங்​குக்கு வந்த பிரதமர் மோடி​யிடம் நாங்​கள் உரு​வாக்கி வரும் மாடல்​களை அவருக்​குக் காட்​டினோம். செயற்கை நுண்​ணறி​விற்கு விலையுயர்ந்த கருவி​கள் தேவை​யில்லை என்​ப​தைக் காட்ட, ஒரு சாதாரண ஃபீச்​சர் போனை அவரிடம் காண்​பித்​தேன்.

ஒரு ஃபீச்​சர் போன் மூல​மாகவே, எங்​களது மாடல்​களை யாராலும் அழைத்து எந்​தக் கேள்​வியை​யும் கேட்க முடி​யும். அவர் இதைக்கேட்ட பிறகு, ‘இது குஜ​ராத்தி மொழி​யில் பேசு​மா?' என்று கேட்​டார். நாங்​கள் அவருக்கு ஒரு குஜ​ராத்தி உதா​ரணத்​தைக் காட்டினோம். அது மிக​வும் உற்​சாகமளிப்​ப​தாக இருந்​தது.

ஏஐ தொழில்​ நுட்​பத்​தில் செயல்​படும் கண்​ணாடியை அவர் அணிந்து பார்த்​தார். இது இந்​தி​யா​வில் உரு​வாக்​கப்​பட்ட மென்பொருள் மூலம் தயாரித்த கண்​ணாடி. புதுமை கண்டுபிடிப்பு​களை மேம்​படுத்த, நமது தொழில்​நுட்​பம் குறித்து பார்​வை​யாளர்​களுக்கு விளக்க வேண்​டும்.

பின்​னர் அவர்​களின் கருத்​துகள் மற்​றும் தேவை​களை கேட்டறிந்து அதற்கு ஏற்ற வகை​யில் நமது புதிய தயாரிப்​பு​களை உரு​வாக்​கி​னால் அது சிறந்​த​தாக இருக்​கும். பொருளா​தா​ரத்​தில் உலகின் மூன்​றாவது பெரிய நா​டாக விளங்​கும் இந்​தி​யா, ஏஐ போட்​டி​யில்​ முன்​னணி​யில்​ இருக்​க வேண்​டும்​.இவ்​​வாறு அவர்​ கூறி​னார்​.

குஜராத்தி மொழியில் ஏஐ பேசுமா? - கண்காட்சியில் சர்வம் சிஇஓ-விடம் பிரதமர் மோடி கேள்வி
சீன பொருட்களை காட்சிக்கு வைத்தது கேலிக்கூத்து: ஏஐ உச்சி மாநாடு பற்றி ராகுல் காந்தி விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in