Vivo X500 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

Vivo X500 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
Updated on: 
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ எக்ஸ்500 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இப்போது இந்தியாவில் விவோ எக்ஸ்500 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘எக்ஸ்’ போன் வரிசையில் வெளிவந்துள்ள இந்த போனுடன் எக்ஸ்500 புரோ மற்றும் எக்ஸ்500 புரோ மேக்ஸ் உள்ளிட்ட போன்களும் வெளிவந்துள்ளது.

விவோ எக்ஸ்500: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

>> 6.59 இன்ச் AMOLED டிஸ்பிளே

>> மீடியாடெக் டிரான்சிட்டி 9600எம் சிப்செட்

>> ஆண்ட்ராய்டு 17 இயங்குதளம்

>> 12 ஜிபி ரேம்

>> 256 ஜிபி ஸ்டோரேஜ்

>> 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா

>> 50 + 50 + 64 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கம் உள்ள கேமரா

>> 7,500mAh பேட்டரி

>> இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

>> 90 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு

>> ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்

>> 5ஜி நெட்வொர்க்

>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்

>> இந்த போனின் விலை ரூ.1,19,999

>> டிச.3 முதல் இந்த போன் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்

Vivo X500 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு டிச.11 வரை நீதிமன்ற காவல்: கடலூர் சிறையில் அடைப்பு

X