வாட்ஸ்அப்பில் ‘Username’ அம்சம்: மெட்டாவுக்கு இந்திய அரசு நோட்டீஸ்

வாட்ஸ்அப்பில் ‘Username’ அம்சம்: மெட்டாவுக்கு இந்திய அரசு நோட்டீஸ்
Updated on
1 min read

புதுடெல்லி: வாட்ஸ்அப்பில் பயனர் பெயர் (Username) அறிமுகம் செய்யும் தொடர்பாக மெட்டா நிறுவனத்துக்கு இந்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.

இன்றைய டிஜிட்டல் உலகில் மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாகி விட்ட வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் தங்களின் தொலைபேசி எண்ணை பகிராமல் அதற்கு மாற்றாக பயனர் பெயரை (Username) பயன்படுத்தும் வகையிலான அம்சம் அறிமுகமாக உள்ளது. இது வாட்ஸ்அப் செயலியில் மிக முக்கிய பிரைவசி அப்டேட் ஆக பார்க்கப்படுகிறது.

இந்த அம்சம் சார்ந்து பயனர்கள் தங்களுக்கு தேவையான பயனர் பெயரை பதிவு செய்யும் வசதியை வாட்ஸ்அப் இந்தியாவில் தொடங்கி உள்ளது. மெட்டாவின் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் பயன்பாட்டில் உள்ள யூஸர்நேமையும் பயனர்கள் இதில் தேர்வு செய்ய முடியம்.

இந்நிலையில், இந்த அம்சம் மோசடிக்கு வழிவகுக்கும் என இந்திய அரசு கவலை கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான விளக்கம் கேட்டு மெட்டா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த அம்சம் மோசடி செயல்களை அதிகரிக்கக்கூடும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மெட்டா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த அம்சத்தை இடைக்காலமாக நிறுத்தி வைக்கவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விளக்கத்தை மூன்று நாட்களில் வழங்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் ‘Username’ அம்சம்: மெட்டாவுக்கு இந்திய அரசு நோட்டீஸ்
“இலக்கு‌ மெஸ்ஸியின் கோல் சாதனை அல்ல; உலகக் கோப்பை” - எம்பாப்பே பகிர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in