கல்வியில் தொலைக்காட்சியின் பங்களிப்பு

கல்வியில் தொலைக்காட்சியின் பங்களிப்பு
Updated on: 
1 min read

இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு 1959ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதே கல்வியையும் தொலைக்காட்சி வழியாகக் கொண்டுசெல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஃபோர்டு அறக்கட்டளை மற்றும் டெல்லி கல்வி இயக்குநரகத்துடன் இணைந்து அகில இந்திய வானொலி நிலையம், 1961 அக்டோபர் 2இல் ‘டெல்லி பள்ளித் தொலைக்காட்சித் திட்ட‘த்தைத் தொடங்கியது. இது பள்ளிப் பாடங்களைக் காட்சிகள் மூலம் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

1975-76 வரை ‘செயற்கைக்கோள் வழி கல்வி ஒளிபரப்பு சோதனைத் திட்டம்‘ செயல்படுத்தப்பட்டது. நாசாவின் செயற்கைக்கோள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தில் கல்வி, வேளாண்மை, சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு ஆகியவை குறித்த நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நாட்டின் 6 மாநிலங்களில் உள்ள கிராமங்களில் ஒளிபரப்பப்பட்டது.

1984 முதல் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தூர்தர்ஷனில் ‘நாடு முழுவதும் வகுப்பறை‘ என்கிற திட்டத்தின் மூலம் உயர்கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.

1991இல் இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி நிகழ்ச்சிகள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகின. இதனால் கல்லூரி செல்ல முடியாதவர்களும் வீட்டில் இருந்தே கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

2000த்தில் ‘ஞான் தர்ஷன்‘ என்கிற 24 மணி நேர கல்வி சானல் தொடங்கப் பட்டது. இதில் பள்ளிக் கல்வி முதல் உயர் கல்விவரை பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. ‘ஸ்வயம் பிரபா‘ திட்டத்தின் மூலம் கல்வி நிகழ்ச்சிகள் டிடிஹெச் சானல்களிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இணைய வசதி குறைவான பகுதிகளில் உள்ளவர்களும் தொலைக்காட்சி மூலம் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்று வருகிறார்கள்.

கல்வியில் தொலைக்காட்சியின் பங்களிப்பு
“வல்லரசுகள் மோதினால் உலகம் சீர்குலையும்” - ட்ரம்ப், புதினுடனான சந்திப்புக்கு பின் ஜி ஜின்பிங் தகவல்

X