Tecno Spark Go 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

Tecno Spark Go 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ‘டெக்னோ ஸ்பார்க் கோ 3’ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்த நிறுவனத்தின் புது வரவாக ‘டெக்னோ ஸ்பார்க் கோ 3’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

பட்ஜெட் விலையில் நான்கு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. இதில் உள்ள ‘Ella ஏஐ’-யை பயன்படுத்தி தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பயனர்கள் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23-ம் தேதி முதல் இந்த போனின் விற்பனை இந்தியாவில் தொடங்குகிறது. இதில் டெக்னோ ஆப்லைன் காலிங் அம்சம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டெக்னோ ஸ்பார்க் கோ 3 சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.74 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே

  • Unisoc T7250 சிப்செட்

  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்

  • 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா

  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

  • 5,000mAh பேட்டரி

  • 15 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

  • டைப்-சி யுஎஸ்பி போர்ட்

  • 4ஜி நெட்வொர்க்

  • 4ஜிபி ரேம்

  • 64/128ஜிபி ஸ்டோரேஜ்

  • இந்த போனின் விலை ரூ.8,999 என அறிவிக்கப்பட்டுள்ளது

Tecno Spark Go 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
ஈரான் பிடியில் 16 இந்திய மாலுமிகள்: விரைந்து மீட்க உறவினர்கள் வேண்டுகோள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in