இந்தியாவில் Samsung Galaxy F70 ஸ்மார்ட்போன் விற்பனை தொடக்கம்: விலை, சிறப்பு அம்சங்கள்

இந்தியாவில் Samsung Galaxy F70 ஸ்மார்ட்போன் விற்பனை தொடக்கம்: விலை, சிறப்பு அம்சங்கள்
Updated on: 
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி எஃப்70 போன் விற்பனை தொடங்கியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் அதன் ‘F’ போன் வரிசையில் புது வரவாக கேலக்சி F70 ஸ்மார்ட்போன் கடந்த 18-ம் தேதி அறிமுகமானது. ஏற்கெனவே F70e மற்றும் F70 புரோ மாடல் போன்கள் F70 சீரிஸில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்சி எஃப்70: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

>> 6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே

>> Exynos 1330 சிப்செட்

>> ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்

>> 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம்

>> 128ஜிபி ஸ்டோரேஜ்

>> 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

>> 50 + 5 + 2 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா

>> 5,000mAh பேட்டரி

>> 25 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

>> 5ஜி நெட்வொர்க்

>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்

>> இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

>> இதன் விலை ரூ.19,999 முதல் தொடங்குகிறது

இந்தியாவில் Samsung Galaxy F70 ஸ்மார்ட்போன் விற்பனை தொடக்கம்: விலை, சிறப்பு அம்சங்கள்
தீபாவளி வரை சிஜேபி போராட்டம் நடத்தப்போவது இல்லை: அபிஜித் திப்கே அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in