தீபாவளி வரை சிஜேபி போராட்டம் நடத்தப்போவது இல்லை: அபிஜித் திப்கே அறிவிப்பு

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே

Updated on: 
1 min read

புதுடெல்லி: வரும் தீபாவளி வரை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நடத்தப்போவது இல்லை. அதனால் எந்தவித போராட்டத்தையும் அதுவரை முன்னெடுக்கும் யோசனை தங்களுக்கு இல்லை என்று சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், “சிஜேபி முன்னெடுத்த இயக்கம் சார்ந்த நகர்வுகள் அனைத்தையும் அசுதோஷ் ரங்கா மற்றும் சவுரவ் தாஸ் ஆகியோர் தான் மேற்கொள்கின்றனர். அவர்கள் இருவருக்கும் இதில் மிகப்பெரிய பங்கு உள்ளது. நான் அவர்கள் சொல்வதை கேட்டு செயல்படுகிறேன். இதுதான் உண்மை.

அவர்கள் இருவர் குறித்தும் நான் அறிவேன். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது என்னை விட சிறப்பாக அவர்கள் செயல்படுவார்கள். அவர்கள் இருவரும் எனக்கு சகோதரர்கள். நாங்கள் எல்லோரும் ஒரே குடும்பம். அவர்களை விட வேறு எதுவும் முக்கியம் அல்ல என கருதுகிறேன்.

அவர்கள் இருவரும் அமைதியான முறையில் போராடிய காரணத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பிரான்ஸ் நாட்டில் நடப்பது போன்ற செயலில் ஈடுபடவில்லை. காந்தி வழியில் அகிம்சையில் பயணிக்கின்றனர்.

வரும் தீபாவளி வரை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நடத்தப்போவது இல்லை. அதனால் எந்தவித போராட்டத்தையும் அதுவரை முன்னெடுக்கும் யோசனை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஜன.31 வரை போராட்டத்தை நிறுத்துங்கள்

எஸ்​ஐஆர் விவ​காரத்​தில் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி வில​கக் கோரி எதிர்க்​கட்​சிகள் நாடு முழுவதும் பல்​வேறு போராட்​டங்​களை நடத்தி வரு​கின்​றன. தலைநகர் டெல்லியில் இந்த போராட்டம் தீவிரமடைந்தது. இதனால் மெட்ரோ ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக டெல்லியில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. அண்மைய டெல்லி போராட்டத்தால் மட்டும் வர்த்தகர்களுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக டெல்லியில் உள்ள வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், எதிர்வரும் பண்டிகை காலம் மற்றும் திருமண முகூர்த்த நாட்களை சுட்டிக்காட்டி ஜனவரி 31, 2027 வரையில் அரசியல் கட்சிகள் தங்களது போராட்டங்களைத் தலைநகர் டெல்லியில் தள்ளிவைக்க வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த வணிகர்கள் கடந்த 16-ம் தேதி வலியுறுத்தி இருந்தனர். இந்த சூழலில் தீபாவளி வரை போராட்டம் நிறுத்தப்படுவதாக திப்கே அறிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே</p></div>
தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைவு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in