

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி ஏ37 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.
இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘ஏ’ வரிசையில் கேலக்சி ஏ37 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனில் ஆறு இயங்குதள அப்டேட் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஏஐ அம்சங்களும் இந்த போனில் இடம்பெற்றுள்ளது. நேர்த்தியான வடிவமைப்பு மூலம் இந்த போன் கவனம் ஈர்க்கிறது. மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.
சாம்சங் கேலக்சி ஏ37 ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே
Exynos 1480 சிப்செட்
ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
8, 12ஜிபி ரேம்
128, 256ஜிபி ஸ்டோரேஜ்
50 + 8 + 5 மெகாபிக்சல் என மூன்று கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
12 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
5,000mAh பேட்டரி
45 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
5ஜி நெட்வொர்க்
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
இந்த போனின் விலை ரூ.41,999 முதல் தொடங்குகிறது