சீர்காழியில் செந்தில்செல்வன் தனி சின்னத்தில் போட்டி: மதிமுக வேட்பாளர் பட்டியல்

சீர்காழியில் செந்தில்செல்வன் தனி சின்னத்தில் போட்டி: மதிமுக வேட்பாளர் பட்டியல்
Updated on
1 min read

சென்னை: மதிமுக சார்பில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 4 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் சீர்காழி தொகுதியில் செந்தில்செல்வன் தனி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் மதிமுக போட்டியிடுவதாக தொகுதி பங்கீட்டில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது அக்கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் பட்டியலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சனிக்கிழமை (மார்ச் 28) வெளியிட்டார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி வருவது கவனிக்கத்தக்கது.

மதிமுக வேட்பாளர்கள் பட்டியல் விவரம்:

1. கடையநல்லூர் - ராஜேந்திரன்

2. மதுரை தெற்கு - பூமிநாதன்

3. மொடக்குறிச்சி - செந்தில்நாதன்

4. சீர்காழி (தனி தொகுதி) - செந்தில்செல்வன் (தனி தொகுதியில் போட்டி)

சீர்காழியில் செந்தில்செல்வன் தனி சின்னத்தில் போட்டி: மதிமுக வேட்பாளர் பட்டியல்
திமுக வேட்பாளர்கள் ‘டிக்’கில் கறார்... கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டில் ‘சேஃப் கேம்’... - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in