Samsung Galaxy A27 ஸ்மார்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

Samsung Galaxy A27 ஸ்மார்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
Updated on
1 min read

சென்னை: சாம்சங் கேலக்சி ஏ27 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘ஏ’ வரிசையில் கேலக்சி ஏ27 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. முன்பக்கத்தில் பன்ச் ஹோல் கேமரா வடிவைப்பு மூலம் மற்ற ‘ஏ’ சீரிஸ் போனில் இருந்து இந்த போன் வடிவமைப்பு ரீதியாக வேறுபடுகிறது.

நான்கு வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த போன் அடுத்த மாதம் முதல் இந்தியாவில் விற்பனைக்கு சந்தையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஆறு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என உறுதி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்சி ஏ27 சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

>> 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி+ AMOLED டிஸ்பிளே

>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

>> ஸ்னாப்டிராகன் 6 ஜெனரேஷன் 3 சிப்செட்

>> 6ஜிபி / 8ஜிபி ரேம்

>> 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்

>> பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகா பிரதான கேமரா

>> 12 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

>> 5,000mAh பேட்டரி

>> டைப்-சி யுஎஸ்பி போர்ட்

>> 25 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் சப்போர்ட்

>> 5ஜி நெட்வொர்க்

>> இந்தியாவில் இந்த போனின் விலை குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Samsung Galaxy A27 ஸ்மார்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இஸ்லாமாபாத்: ஷோயப் அக்தர் சகோதரரின் இறுதிச் சடங்கில் லஷ்கர் தீவிரவாதிகள் பங்கேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in