பட்ஜெட் விலையில் Realme C83 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

பட்ஜெட் விலையில் Realme C83 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி சி83 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது ரியல்மி சி83 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

ரியல்மி சி83 ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.8 இன்ச் எல்சிடி டிஸ்பிளே

  • மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட்

  • ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

  • 4ஜிபி / 6ஜிபி ரேம்

  • 64ஜிப் / 128ஜிபி ஸ்டோரேஜ்

  • 7,000mAh பேட்டரி

  • 15 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் அம்சம்

  • ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்

  • 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா

  • 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா

  • இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

  • 5ஜி நெட்வொர்க்

  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்

  • இந்த போனின் விலை ரூ.13,499 முதல் தொடங்குகிறது

பட்ஜெட் விலையில் Realme C83 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
Nothing Phone (4a) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in