

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் இப்போது இந்தியாவில் ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது ஒப்போ. இதே சீரிஸில் வெளியான முந்தைய மாடலான ஃபைண்ட் எக்ஸ்9 போன் உடன் ஒப்பிடும்போது இந்த போனில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இல்லை என அறியமுடிகிறது. இந்த புதிய போனுடன் ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனும் சந்தையில் அறிமுகமாகி உள்ளது.
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
>>6.59 இன்ச் AMOLED டிஸ்பிளே
>>மீடியாடெக் டிமான்சிட்டி 9500எஸ் சிப்செட்
>>ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
>>12ஜிபி ரேம்
>>256, 512ஜிபி ஸ்டோரேஜ்
>>பின்பக்கத்தில் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
>>32 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
>>7025mAh பேட்டரி
>>80 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
>>5ஜி நெட்வொர்க்
>>யுஎஸ்பி டைப்-சி போர்ட்
>>மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
>>இந்த போனின் விலை ரூ.79,999 முதல் தொடங்குகிறது