டெல்லியில் நடைபெறவுள்ள ஏஐ கண்காட்சியில் ஓபன் ஏஐ உட்பட 400 நிறுவனங்கள் பங்கேற்பு

டெல்லியில் நடைபெறவுள்ள ஏஐ கண்காட்சியில் ஓபன் ஏஐ உட்பட 400 நிறுவனங்கள் பங்கேற்பு
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள பிரகதி மைதானத்​தில் ‘இந்​தியா ஏஐ இம்​பாக்ட் எக்​ஸ்போ 2026' பிப்​ர​வரி 16 முதல் 20 வரை நடைபெற உள்​ளது.

இந்த நிகழ்​வில், என்​விடி​யா, கூகுள் மற்​றும் ஓபன்ஏஐ உள்​ளிட்ட சுமார் 400 முன்​னணி நிறு​வனங்​கள் பங்​கேற்​க​வுள்​ளன. இந்த நிறுவனங்​களின் உயர் அதி​காரி​கள் இந்​திய நிறு​வனங்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தவுள்​ளனர். 100-க்​கும் மேற்​பட்ட நாடு​கள் இதில் பங்​கேற்​பதை உறுதி செய்​துள்​ளன.

இந்த கண்​காட்​சிக்​கான ஏற்​பாடு​களை செய்​துள்ள இந்​திய மென்​பொருள் தொழில்​நுட்ப பூங்​காக்​களின் (எஸ்​டிபிஐ) தலைமை இயக்​குநர் அரவிந்த் குமார், பிடிஐ செய்​தி​யாளரிடம் கூறும்​போது, “இந்த கண்​காட்சி ஏஐ சூழலமைப்​பில் உள்ள நிறு​வனங்​களுக்கு ஒரு பால​மாக அமை​யும். இந்​திய கண்​டு​பிடிப்​பாளர்​கள் தங்​கள் திறமையை வெளிப் ​படுத்த இது ஒரு நல்​வாய்ப்​பாக இருக்​கும்.

பிரதமர் மோடி அடுத்த ஏஐ உச்​சி​ மா​நாட்டை இந்​தி​யா​வில் நடத்தப்​போவ​தாக அறி​வித்த உடனேயே இதற்​கான பணி​கள் தொடங்​கி​விட்​டன. நாட்​டின் முன்​னணி தொழில்​நுட்ப நிறுவனங்கள் மற்​றும் பல்​வேறு அரசு அமைச்​சகங்​களும் இதில் பங்​கேற்​கின்​றன” என்​றார்.

இந்த கண்​காட்​சி​யில் ஸ்டார்ட்​-அப் நிறு​வனங்​களை முதலீட்டாளர்களு​டன் இணைப்​ப​தற்​கான அமர்​வு​கள் நடைபெறும். ஏஐ மற்​றும் அதன் தாக்​கம் குறித்து விவா​திக்க சுமார் 700 அமர்​வு​கள் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளன. இந்த உச்சி மாநாடு, மக்​கள், பூமி மற்​றும் வளர்ச்சி ஆகிய 3 முக்​கிய தூண்​களை அடிப்படை​யாகக் கொண்​டிருக்​கும்​ என கூறப்​பட்​டுள்​ளது.

டெல்லியில் நடைபெறவுள்ள ஏஐ கண்காட்சியில் ஓபன் ஏஐ உட்பட 400 நிறுவனங்கள் பங்கேற்பு
கோயில் நிலத்தில் குடியிருப்பு கட்டி ரூ.2,500 கோடி மோசடி: நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு பாஜக வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in