கோயில் நிலத்தில் குடியிருப்பு கட்டி ரூ.2,500 கோடி மோசடி: நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு பாஜக வலியுறுத்தல்

கோயில் நிலத்தில் குடியிருப்பு கட்டி ரூ.2,500 கோடி மோசடி: நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு பாஜக வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்​பாளர் நாராயணன் திருப்​பதி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: சென்​னை, கொரட்​டூரில் கோயில் நிலத்​தில் 2036 வீடு​கள் கட்டி 10 ஆயிரம் பேரை ஏமாற்றி ரூ.2,500 கோடி மதிப்​பில் மிகப் பெரிய மோசடி நடந்​திருப்​ப​தாக வெளி​யான செய்தி கடும் அதிர்ச்​சி​யளிக்​கிறது.

பல ஆண்​டு​களுக்குப் பிறகு நீதி​மன்​றம் இது கோயில் நிலம் என்ற தீர்ப்பை வழங்​கி​யுள்​ள​தாக கூறப்​படு​கிறது. தனி​யார் கட்​டு​மான நிறு​வனம் திட்​ட​மிட்ட ரீதி​யில் மக்​களை ஏமாற்​றிய​தாக பாதிக்​கப்​பட்​டோர் கூறுகிறார்​கள்.

கோயில் நிலம் என்​பதை மறைத்​து, மக்​களிடம் பல்​லா​யிரம் கோடி ரூபாய் ஏமாற்​றிய அந்​நிறு​வனத்​தின் உரிமை​யாளர்​களை உடனடி​யாக கைது செய்து விசா​ரிக்க வேண்டும்.

மேலும், நிலப்​பத்​திரங்​களை ஆய்வு செய்​யாமல் வங்​கி​கள் எவ்​வாறு மக்​களுக்கு கடன் கொடுத்தன என்​பதை தொடர்​புடைய வங்​கி​கள் விளக்​கு​வதோடு, தவறு செய்​தவர்​களை கடுமை​யாக தண்​டிக்க வேண்​டும்.

இதன் பின்​னணி​யில் யார் உள்​ளனர். இந்து அறநிலை​யத்​துறை என்ன செய்து கொண்​டிருந்​தது என்​ப​தை யெல்​லாம் விசா​ரித்​து, இதற்கு உடந்​தையாக இருந்​தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டியது தமிழக அரசின் கடமை. முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இது குறித்து வாய் திறப்​பா​ரா? நடவடிக்கை எடுப்​பா​ரா?

கோயில் நிலத்தில் குடியிருப்பு கட்டி ரூ.2,500 கோடி மோசடி: நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு பாஜக வலியுறுத்தல்
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட பாம்பு உள்ளிட்ட 31 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in