

சென்னை: ஓபன் ஏஐ நிறுவனம் ஆடியோ வடிவிலான சாதனத்தை வடிவமைத்து வருவதாக தகவல். ஏஐ திறன் கொண்ட இந்த சாதனத்தின் பெயர் ‘SweetPea’ என சொல்லப்படுகிறது. இந்த சாதனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சாதனத்தை வடிவமைக்கும் பணியில் ஓபன் ஏஐ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக பிரபல தொழில்நுட்ப சாதன வடிவமைப்பாளர் ஜோனாதன் ஐவ் உடன் இணைந்து ஓபன் ஏஐ பணியாற்றி வருகிறது. இவர் ஆப்பிள் சாதன வடிவமைப்பில் முக்கிய அங்கம் வகித்தவர்.
ஓபன் ஏஐ வடிவமைக்கும் இந்த சாதனம், முழுதும் குரல் அடிப்படையிலான கட்டளையில் இயங்கும் கணினியின் புது வடிவமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவொரு சிறிய ரக கணினி என தகவல். இதில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி-யும் இடம்பெற்றுள்ளதாக தகவல். இந்த சாதனம் சந்தையில் அறிமுகமாகும் போது ஆப்பிள் ஏர்பாட்ஸுக்கு சரியான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சாதனம் வரும் செப்டம்பரில் சந்தையில் அறிமுகமாகும் என தகவல். இத்தனை சாதனங்களை விற்பனை செய்ய வேண்டுமென்ற டார்கெட் உடன் ஓபன் ஏஐ இதன் விற்பனையை தொடங்க உள்ளது. இதற்காக ஃபாக்ஸ்கான் உடன் ஓபன் ஏஐ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்.