ஓய்வை அறிவித்தார் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் கேப்டன் அலிசா ஹீலி

இந்திய தொடருடன் விடைபெறுகிறார்
ஓய்வை அறிவித்தார் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் கேப்டன் அலிசா ஹீலி
Updated on
1 min read

சென்னை: ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலிசா ஹீலி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உள்நாட்டில் இந்தியாவுக்கு எதிரான தொடருடன் அவர் ஓய்வு பெறுகிறார்.

35 வயதான அவர், சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று பார்மேட்டிலும் 7,000+ ரன்களை எடுத்துள்ளார். கடந்த 2010-ல் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆறு முறை டி20 உலகக் கோப்பை, இரண்டு முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் அங்கம் வகித்தவர்.

“இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் தான் எனது கடைசி தொடர். இதில் உணர்ச்சிகள் அதிகம் நிறைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட வேண்டுமென்ற ஆர்வம் எனக்குள் உள்ளது. இருப்பினும் தொழில்முறை ஆட்டத்துக்கான போட்டித்தன்மையை ஏனோ நான் இழந்துவிட்டதாக கருதுகிறேன்.

இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் நான் பங்கேற்க்கவில்லை. அதனால் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் நான் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் நான் விளையாட ஆர்வமாக உள்ளேன். அதுவே எனது கடைசி தொடர்” என அலிசா ஹீலி தெரிவித்துள்ளார்.

அவரது சாதனைகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் இந்நாள், முன்னாள் வீரர்கள் இப்போது புகழ்ந்துள்ளனர். கிரிக்கெட் வர்ணனையாளராக கடந்த சில ஆண்டுகளாக ஹீலி பணியாற்றி வருகிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஹீலியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வை அறிவித்தார் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் கேப்டன் அலிசா ஹீலி
“சீட் வாங்குவதிலேயே காங்கிரஸாருக்கு குறி!” - பெமக தலைவர் என்.ஆர்.தனபாலன் நேர்காணல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in