

ஒன்பிளஸ் நார்ட் 6 ஸ்மார்ட்போன்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் நார்ட் 6 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்ட் 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.
நார்ட் சீரிஸ் மூலம் பிரீமியம் மிட்-ரேஞ்ச் போன்களை ஒன்பிளஸ் நிறுவனம் சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், ஒன்பிளஸ் நார்ட் 6 போனின் பேட்டரி மற்றும் சிப்செட் ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இரண்டு விதமான ரேம் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
ஒன்பிளஸ் நார்ட் 6 சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே
ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜெனரேஷன் 4 சிப்செட்
8ஜிபி, 12ஜிபி ரேம்
256ஜிபி ஸ்டோரேஜ்
50 + 8 மெகாபிக்சல் என இரண்டு கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
9,000mAh பேட்டரி
80 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
5ஜி நெட்வொர்க்
ட்யூயல் ஸ்லிம் ஸ்லாட்
மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
இந்த போனின் விலை ரூ.38,999 முதல் தொடங்குகிறது