இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன்கள் விலை உயர்வு: காரணம் என்ன?

இந்திய சந்தையில்  ஸ்மார்ட்போன்கள் விலை உயர்வு: காரணம் என்ன?
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு பிரபல நிறுவன போன்களின் விலை சுமார் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தகவல். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

இன்றைய டிஜிட்டல் உலக வாழ் மக்களுக்கு ஸ்மார்ட்போன் அவசியமானதொரு தொழில்நுட்ப கருவியாக உள்ளது. தொலைத்தொடர்பு சாதனம் என்ற எல்லையை கடந்து பல்வேறு தேவைகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுகிறது. சர்வதேச ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு உலக அளவில் பார்த்தால் இந்திய சந்தை மிக முக்கியமானது. அதனால் தான் ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக கடையை விரித்துள்ளன. இந்தச் சூழலில் ஸ்மார்ட்போன்களின் விலை உயர்ந்துள்ளது.

காரணம் என்ன? - போன்களின் ரேம் மற்றும் ஸ்டோரேஜை அதனுள் இருக்கும் மெமரி சிப்தான் உறுதி செய்யும். இப்போது இந்த சிபி தயாரிப்பு நிறுவனங்கள் ஏஐ தரவு மையங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்ற காரணத்தால் சிப் தேவையுள்ள மற்ற தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்மார்ட்போன், கணினி தயாரிப்பும் அடங்கியுள்ளதாக தகவல். சிப்களுக்கான தேவை அதிகரித்துள்ள காரணத்தால் அதன் விலை கடந்த ஆண்டின் பிற்பாதியில் உயர தொடங்கியது.

பொதுவாக ஸ்மார்ட்போன்களின் விலை அதன் ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது. சராசரியாக 8ஜிபி ரேம் கொண்ட போன்களின் விலை சுமார் ரூ.10,000 என இருக்கும். அதுவே 12ஜிபி ரேம் கொண்ட போன்கள் என்றால் அதன் விலை சுமார் ரூ.15,000 என இருக்கும். இப்போது சிப் தட்டுப்பாட்டால் இந்த விலை உயர்ந்துள்ளது.

போன்களின் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது? - ஒன்பிளஸ், ரியல்மி, சியோமி, மோட்டோரோலா, நத்திங் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சாம்சங், ஒப்போ, விவோ நிறுவன போன்களின் விலை இப்போது உயர்ந்துள்ளதாக தகவல். இதனால் பட்ஜெட் மற்றும் என்ட்ரி செக்மென்ட் பிரிவில் இந்நிறுவனங்களால் விற்பனை செய்யப்படும் போன்களின் விலை சுமார் 1,500 முதல் 3,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மிட்-செக்மென்ட் மற்றும் பிரீமியம் போன்களின் விலையும் கூடியுள்ளது.

விலை உயர்வு காரணமாக இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனை சரிந்துள்ளது. பட்ஜெட் விலையில் போன் வாங்க விரும்பும் பயனர்களுக்கு குறைந்த ரேம், ஸ்டோரேஜ் கொண்ட போன்கள்தான் பெற முடியும் ஸ்மார்ட்போன் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். கூடுதல் ரேம், ஸ்டோரேஜ் என்றால் அதன் விலை அதிகம் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இந்திய சந்தையில்  ஸ்மார்ட்போன்கள் விலை உயர்வு: காரணம் என்ன?
Realme 16 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in