OnePlus N6x ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன்

Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் என்6எக்ஸ் போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. கடந்த ஜூன் மாத இறுதியில் ‘என்’ சீரிஸ் வரிசையில் முதல் முறையாக இந்தியாவில் ‘என்6’ போனை வெளியிட்டது ஒன்பிளஸ் நிறுவனம்.

இந்நிலையில், தற்போது என்6எக்ஸ் போன் வெளிவந்துள்ளது. மிட் ரேஞ்சில் போனை வாங்க விரும்பும் பயனர்களை கருத்தில் கொண்டு ஒன்பிளஸ் என்6எக்ஸ் சந்தைக்கு வந்துள்ளது. அடுத்த வாரம் இந்த போன் சந்தையில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் பேட்டரி பயனர்கள் இடையே கவனம் ஈர்த்துள்ளது.

ஒன்பிளஸ் என்6எக்ஸ்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

>> 6.8 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே

>> மீடியாடெக் டிமான்சிட்டி 6360 அபெக்ஸ் சிப்செட்

>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

>> 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள கேமரா

>> 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா

>> 4ஜிபி ரேம்

>> 64 / 128ஜிபி ஸ்டோரேஜ்

>> 7,000mAh பேட்டரி

>> 15 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

>> ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்

>> இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

>> 5ஜி நெட்வொர்க்

>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்

>> இந்த போனின் விலை ரூ.18,999 முதல் தொடங்குகிறது

<div class="paragraphs"><p>ஒன்பிளஸ் என்6எக்ஸ் ஸ்மார்ட்போன்</p></div>
தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைவு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in