OnePlus 15R ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

OnePlus 15R ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இது பிரீமியம் செக்மென்ட் போனாக அறிமுகமாகி உள்ளது.

சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் ஒன்பிளஸ் 15ஆர் போன் அறிமுகமாகி உள்ளது.

இந்த போனின் பேட்டரி, ப்ராசஸர், டிஸ்பிளே ரெஃப்ரஷ் ரேட், ஏஐ அம்சங்கள், ட்யூரபிலிட்டி உள்ளிட்டவை ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருந்தது. தற்போது ஒன்பிளஸ் 15ஆர் வெளிவந்துள்ளது.

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.83 இன்ச் AMOLED டிஸ்பிளே

  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 5 சிப்செட்

  • ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

  • 12 ஜிபி ரேம்

  • 256 ஜிபி / 512 ஜிபி ஸ்டோரேஜ்

  • 7400mAh பேட்டரி

  • 80 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்

  • பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா

  • 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

  • 5ஜி நெட்வொர்க்

  • யுஎஸ்பி 2.0 டைப்-சி போர்ட்

  • இந்த போனுடன் சார்ஜர் கிடைக்கிறது

  • மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

  • இதன் விலை ரூ.47,999 முதல் தொடங்குகிறது

OnePlus 15R ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
பனிமூட்டம் காரணமாக ஆட்டம் ரத்து - IND vs SA 4-வது டி20 போட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in