Nothing Phone 4b ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

Nothing Phone 4b ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நத்திங் போன் 4b அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ல் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

அந்நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான கார்ல் பெய் (Carl Pei) தான் இந்த வரவேற்புக்கு காரணம். இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டவர். பின்னர் கடந்த 2021-ல் நத்திங் நிறுவனத்தை தொடங்கினார். இந்நிலையில், தற்போது நத்திங் போன் (4b) ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகமாகி உள்ளது. ‘b’ சீரிஸ் வரிசையில் வெளிவந்துள்ளது முதல் போனாக இது அறியப்படுகிறது.

உலக அளவில் ஸ்மார்போனின் உதிரி பாகங்கள் மற்றும் RAM விலை உயர்ந்து வரும் நிலையில் நத்திங் நிறுவனம் இந்த போனை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நத்திங் நிறுவனத்தின் வழக்கமான டிரான்ஸ்பரன்ட் டிசைனில் இந்த போன் வெளிவந்துள்ளது.

Nothing Phone 4b: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

>> 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே

>> ஸ்னாப்டிராகன் 6 ஜெனரேஷன் 4 சிப்செட்

>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

>> 8 ஜிபி ரேம்

>> 128, 256 ஜிபி ஸ்டோரேஜ்

>> 50 + 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா

>> 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

>> இந்தியாவில் பிரத்யேகமாக 6,000mAh பேட்டரி உடன் இந்த போன் வெளியாகி உள்ளது

>> உலக அளவில் 5,200mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது

>> 33 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

>> ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்

>> 5ஜி நெட்வொர்க்

>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்

>> இந்தியாவில் ஆர்சிபி எடிஷன் மற்றும் கருப்பு, வெள்ளை, நீலம் உள்ளிட்ட வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது

>> இதன் விலை ரூ.34,999 முதல் தொடங்குகிறது

Nothing Phone 4b ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின் அணி | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in