Motorola Edge 70 Neo ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

Motorola Edge 70 Neo ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
Updated on: 
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

இந்த நிறுவனத்தின் ‘எட்ஜ்’ சீரிஸ் வரிசையில் மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ போன் தற்போது சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் ப்ரீமியம் செக்மென்ட் பிரிவில் வெளிவந்துள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 70 நியோ: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

>> 6.8 இன்ச் AMOLED டிஸ்பிளே

>> ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரேஷன் 3 சிப்செட்

>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

>> மூன்று முறை இயங்குதளத்தை அப்டேட் செய்யலாம்

>> 8ஜிபி ரேம்

>> 128ஜிபி ஸ்டோரேஜ்

>> 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா

>> 50 + 2 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா

>> 7,000mAh பேட்டரி

>> 45 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

>> ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்

>> 5ஜி நெட்வொர்க்

>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்

>> இந்த போனின் விலை ரூ.40,999

Motorola Edge 70 Neo ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
Lava Smart 4 Pro போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

X