

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா ஸ்மார்ட் 4 புரோ போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் ஸ்மார்ட்போன் மற்றும் ஃபீச்சர் போன் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், இந்திய சந்தையில் ஸ்மார்ட் 4 புரோ போனை அறிமுகம் செய்துள்ளது லாவா. பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. கடந்த 20-ம் தேதி வெளிவந்த இந்த போன் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.
லாவா ஸ்மார்ட் 4 புரோ போன்: சிறப்பு அம்சங்கள்
>> 6.75 இன்ச் எல்சிடி டிஸ்பிளே
>> Unisoc T610 சிப்செட்
>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
>> 4ஜிபி ரேம்
>> 64ஜிபி ஸ்டோரேஜ்
>> 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
>> 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
>> 7,000 mAh பேட்டரி
>> 18 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு
>> 4ஜி நெட்வொர்க்
>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்
>> இந்த போனின் விலை ரூ.10,999