

மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் போன்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் இந்தியாவில் இப்போது அறிமுகமாகி உள்ளது.
இதன் மூலம் மோட்டோரோலா நிறுவனம் அதன் எட்ஜ் 70 சீரிஸை இந்தியாவில் விரிவு செய்துள்ளது. மிட் செக்மென்ட் விலையில் இந்த போன் வெளிவந்துள்ளது. மோட்டோ ஏஐ 2.0 டூல்ஸ்கள், 3 இயங்குதள அப்டேட் உள்ளிட்டவற்றின் மூலம் இந்த போன் கவனம் ஈர்க்கிறது. மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
6.72 இன்ச் AMOLED டிஸ்பிளே
ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரேஷன் 4 சிப்செட் (இந்தியா)
8 / 12 ஜிபி ரேம்
128 / 256 ஜிபி ஸ்டோரேஜ்
50 + 13 மெகாபிக்சல் என இரண்டு கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
7000mAh பேட்டரி
68 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
5ஜி நெட்வொர்க்
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
இந்த போனின் விலை ரூ.26,999 முதல் தொடங்குகிறது
வரும் 12-ம் தேதி முதல் இந்த போன் சந்தையில் கிடைக்கும்