பிழையின்றிப் படிக்கலாம்! | எளிதில் கற்கலாம் ஏஐ 21

பிழையின்றிப் படிக்கலாம்! | எளிதில் கற்கலாம் ஏஐ 21
Updated on: 
2 min read

பள்ளி மாணவர்​களிடையே படிக்​கும் திறனை ஏற்​படுத்​து​வதும் வளர்த்​தெடுப்​ப​தும் மிகப்​பெரிய சவால். ஆசி​ரியராக ஒவ்​வொரு மாணவரின் வாசிப்பு வேகத்​தையும் உச்​சரிப்​புச் சிக்​கல்​களை​யும் தனித்​தனியாகக் கவனித்​துச் சரிசெய்​வது இன்​னும் கடினமானது. இதற்​கொரு அதிநவீனத் தீர்​வாக மைக்​ரோசாப்ட் நிறு​வனத்​தின் செய்​யறி​வுத் தளமான ‘Microsoft Reading Coach’ உரு​வெடுத்​துள்​ளது.

முற்​றி​லும் கட்​ட​ணமின்​றிக் கிடைக்​கும் இந்​தக் கருவி, மாணவர்​கள் தாங்​களாகவே சத்​த​மாக வாசித்​துப் பயிற்சி பெறவும், அவர்​களின் உச்​சரிப்​புப் பிழைகளை உடனுக்​குடன் திருத்​திக்​கொள்​ளவும் உதவு​கிறது.

தனிப்​பயனாக்​கப்​பட்ட வாசிப்​புப் பயிற்சி (Personalized Reading Practice) இந்​தத் தளம் ஒவ்​வொரு மாணவரின் தற்​போதைய வாசிப்​புத் திறனை (Reading Level) ஆய்​வுசெய்து, அவர்​களின் திறனுக்கு ஏற்ப பொருத்​த​மான கதைகளை​யும் கட்​டுரைகளை​யும் பரிந்​துரைக்​கிறது. மாணவர்​கள் தங்​களுக்​குப் பிடித்​த​மான தலைப்​பு​களைத் தேர்ந்​தெடுத்து சுய​மாகப் படித்​துப் பயிற்சி பெறலாம்.

நிகழ்​நேர உச்​சரிப்​பும் பிழை திருத்​தமும் (Real-time Pronunciation Feedback)

மாணவர்​கள் மைக்ரோஃபோன் வழியே உரக்​கப் படிக்​கும்​போது, செய்​யறி​வுத் தொழில்​நுட்​பம் அவர்​களின் குரலைத் துல்​லிய​மாகப் பகுப்​பாய்வு செய்​கிறது. ஒரு மாணவர் குறிப்​பிட்ட வார்த்​தையைத் தவறாக உச்​சரித்​தால், உடனே அந்த வார்த்​தையைச் சுட்​டிக்​காட்​டிச் சரியான உச்​சரிப்​பைச் (Correct Pronunciation) சொல்லி வழிகாட்​டு​கிறது. இதிலுள்ள ‘Immersive Reader’ தொழில்​நுட்​பம், கடினமான சொற்​களின் பொருளை அறிய​வும், படங்​களைப் பார்த்​துப் புரிந்​து​கொள்​ளவும், எழுத்​துக்​கூட்​டிப் படிக்​கவும் (Syllabification) பெரிதும் உதவு​கிறது.

செய்​யறி​வின் வழியே கதை உரு​வாக்​கம் (AI-Generated Stories)

மாணவர்​களின் வாசிப்பு ஆர்​வத்​தைத் தூண்​டும் வகை​யில், அவர்​களின் விருப்​பத்​துக்கு ஏற்​பச் செய்​யறி​வின் துணை​யுடன் புதிய கதைகளை உடனடி​யாக உரு​வாக்​கும் வசதி​யும் இதில் உள்​ளது. இது மாணவர்​களின் வாசிப்பு ஆர்​வத்​தைப் பெருக்க உதவு​கிறது.

ஆசி​ரியர்​களுக்​கான முன்​னேற்ற அறிக்​கைகள் (Progress Tracking for Educators)

ஆசி​ரியர்​களுக்​கென அமைக்​கப்​பட்​டிருக்​கும் முகப்​புப்​பலகை (dashboard) மூலம் மாணவர்​கள் எந்​தெந்த வார்த்​தைகளில் அதி​கம் தடு​மாறுகிறார்​கள், அவர்​களின் வாசிப்பு வேகமும் (Words Per Minute) துல்​லியமும் எந்த அளவில் உள்​ளன உள்​ளிட்ட தகவல்​களு​டன் கூடிய விரிவான அறிக்​கைகளைப் பெற முடியும்.

சுதந்​திர​மான, பாது​காப்​பான கற்​றல் சூழல் (Safe & Independent Environment) மாணவர்​கள் எத்​தகைய இடையூறும் இன்​றித் தங்​கள் வேகத்​துக்கு (At their own pace) ஏற்​றபடி, எவ்​விதத் தயக்​கமும் இன்​றிப் பயிற்சி பெற ஏது​வான டிஜிட்​டல் சூழலை இத்​தளம் வழங்​கு​கிறது. ஆங்​கிலம் மட்​டுமன்​றித் தமிழ் உள்​ளிட்ட உலக மொழிகள் பல​வற்​றி​லும் வாசித்​துப் பயிற்​சிபெறும் வகை​யில் இது வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

பிற செய்​யறி​வுக் கரு​வி​களில் இருந்து இது எவ்​வாறு வேறு​படு​கிறது?

Standard E-books / Audiobooks போன்​றவற்​றைப் பயன்​படுத்​தும்​போது மாணவர்​கள் அவற்​றில் உள்ள உரைகளைக் கேட்​கவும் வாசிக்​கவும் மட்​டுமே முடியும். Microsoft Reading Coach தளமோ, மாணவர்​கள் தாங்​களாகவே வாசித்து, செய்​யறி​வின் உதவியுடன் தங்​களு​டைய உச்​சரிப்​புப் பிழைகளைத் திருத்​திக்​கொள்​ளும் வாய்ப்பை வழங்​கு​கிறது. தனித்​து​வ​மான இந்​தக் கற்​றல் சூழலின் விளைவாக விரைவிலேயே அவர்​கள் அடுத்​தடுத்த வாசிப்பு நிலைகளை நோக்கி நகரத் தொடங்​கு​கின்​றனர்.

யாருக்கு இது மிகவும் பயன்​படும்?

பள்ளி மாணவர்​கள், மாற்று மொழி கற்​போர், பெற்​றோர், பள்ளி ஆசி​ரியர்​கள். வாசிப்​பின்​மீது மாணவர்​களுக்கு இருக்​கும் பயத்​தைப் போக்​கு​வ துடன், அவர்​களுக்​குத் தேவை​யான தன்​னம்​பிக்​கையையும் சரளமாகப் பேசும் திறனையும் வளர்ப்​ப​தில் Microsoft Reading Coach கருவி முக்​கியப் பங்​காற்​றுகிறது.

https://coach.microsoft.com/

செய்யறிவு விதி: செய்​யறி​வுக் கரு​வி​கள் அனைத்​துமே மனிதர்​களின் தரவு​களில் இருந்​து​தான் கற்​கின்​றன. ஆகவே அவற்​றின் பதில்​களில் சில சமூகச் சார்​புநிலைகள் இருக்​கக்​கூடும். ஏதோவொரு சூழலில், அவை தவறான கருத்​துகளையோ பாகுபாடுகளையோ முன்​வைத்​தால் அவற்றை ஏற்​காதீர்​கள். எப்​போதும் நடுநிலை​யோடு தகவல்களை அணுகுங்கள்.

- மேலும் கற்கலாம்.

- கட்டுரையாளர், பேராசிரியர்,

தொழில்​நுட்ப எழுத்​தாளர்.

பிழையின்றிப் படிக்கலாம்! | எளிதில் கற்கலாம் ஏஐ 21
ஆவணங்களை வரைபடமாக்கலாம்! | எளிதில் கற்கலாம் ஏஐ 20

X