

இன்று வாட்ஸ்அப், இன்ஸ்டா கிராம், ஃபேஸ்புக், மெசஞ்சர் உள்ளிட்ட செயலிகளைப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. பயனர்களின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்கும், படைப்பாற்றல் சார்ந்த பணிகளை முடித்துத் தரும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு உதவியாளரே Meta AI.
செயலிகளுக்கு உள்ளேயே செய்யறிவு உரையாடல் (In-App Integration) மெட்டா நிறுவனத்தின் திறந்த வள (Open Source) பெருமொழி மாதிரியான, ‘லாமா’ (Llama - Large Language Model Meta AI) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்தக் கருவி இயங்குகிறது.
Meta AI-ஐ பயன்படுத்த தனியாக வேறு எந்தச்செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசிய மில்லை. வாட்ஸ்அப் தேடல் பெட்டியிலோ, இன்ஸ்டாகிராம் மெசேஜ்களிலோ எளிய முறையில் தட்டச்சு செய்து கேள்விகளைக் கேட்கலாம். மேலும், நண்பர்களின் குழு உரையாடல்களில் (Group Chats) @Meta AI எனக் குறிப்பிட்டு, சுற்றுலாத் திட்டங்கள், உணவகப் பரிந்துரைகள், கல்வி சார்ந்த சந்தேகங்களை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆலோசிக்க முடியும்.
உடனடி புகைப்பட உருவாக்கம் (Real-time Image Generation)
நாம் கொடுக்கும் கட்டளை களுக்கு (Text Prompts) ஏற்ப மிகத் துல்லியமான உயர்தரப் புகைப்படங்களை நொடிகளில் உருவாக்கித் தரும் ‘Imagine’ தொழில்நுட்பம் இதில் உள்ளது. பயனர்கள் தட்டச்சு செய்யும்போதே, ஒவ்வொரு சொல்லுக்கும் ஏற்பப் புகைப்படங்கள் நேரலையில் மாறிக்கொண்டே இருக்கும் ‘Imagine Flash’ வசதியைக் கொண்டுள்ள இக்கருவியில், புகைப்படங்களை GIF படங்களாக மாற்றியமைக்கும் வசதியும் உள்ளது.
தேடுபொறி இணைப்பு (Real-time Search Integration)
கூகுள் (Google), பிங் (Bing) போன்ற முன்னணி தேடுபொறிகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால், உலக அளவில் நடக்கும் நேரலைச் செய்திகள், விளையாட்டு முடிவுகள், சந்தை நிலவரங்கள், பயண விவரங்களை உடனுக்குடன் பெறமுடிகிறது.
படைப்பாளர்களுக்கான உள்ளடக்க உதவி (Content Creation & Captions)
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் (Reels), ஃபேஸ்புக் பதிவுகளுக்குத் தேவையான சுவாரசியமான தலைப்புகள் (Captions), ஹேஷ்டேகுகள் (Hashtags), கதைக்களங்களை (Script Ideas) நொடிகளில் உருவாக்கித்தருவது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.
திறன் கண்ணாடிகளும் குரல்வழிச் சேவையும் (Meta Glasses Integration)
திறன்பேசிகளில் மட்டுமன்றி, Ray-Ban Meta திறன் கண்ணாடிகளிலும் (Smart Glasses) இத்தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் குரல் மூலமாகவே கட்டளைகளை வழங்கி, சுற்றியுள்ள இடங்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிய முடியும்.
பிற செய்யறிவுக் கருவிகளிள் ஈருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?
ஏனைய கருவிகளைப் பயன்படுத்த அவற்றுக்கென அமைக்கப்பட்டுள்ள தளங்களுக்கோ செயலிகளுக்கோ சென்று கணக்குத் தொடங்கிப் பயன்படுத்தவேண்டும். மாறாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களின் உள்ளேயே Meta AI இலவசமாக இணைக்கப்பட்டிருப்பதால், நேரத்தைச் சேமித்து மிக எளிதாகப் பயன்படுத்த முடிகிறது.
யாருக்கு இது மிகவும் பயன்படும்?
மாணவர்கள், சமூக ஊடகப் படைப்பாளிகள் (Content Crea tors), விற்பனைப் பிரதிநிதிகள், சந்தைப்படுத்துநர்கள், வணிகர்கள், தகவல்களை விரைவாகப் பெற விரும்பும் பொதுமக்கள். சமூக ஊடக அனுபவத்தை மேலும் எளிமையாக்கி, செய்யறிவை மக்களின் அன்றாடத் தகவல்தொடர்பின் ஒரு பகுதியாக மாற்றுவதில் Meta AI முக்கியப் பங்கு வகிக்கிறது.
செய்யறிவு விதி: உங்கள் வங்கி விவரங்கள், மருத்துவத் தகவல்கள் போன்றவற்றைச் செய்யறிவுக் கருவிகளிடம் பகிர்வதைத் தவிருங்கள். இணையத்தில் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். விழிப்புடன் இருப்பது ஆபத்து களைத் தவிர்க்கும்.
எடுத்துக்காட்டாக ஒரு கட்டளை
Give me 3 creative script ideas for a 30-second YouTube Short about ‘Time Management Tips for College Students.
- மேலும் கற்கலாம்.
- கட்டுரையாளர், பேராசிரியர், தொழில்நுட்ப எழுத்தாளர்.