செய்​யறி​வுக் கருவி​களும், சமவாய்ப்பும் | எளிதில் ஏஐ கற்கலாம் 1

செய்​யறி​வுக் கருவி​களும், சமவாய்ப்பும் | எளிதில் ஏஐ கற்கலாம் 1
Updated on: 
2 min read

ஒரு வேலையை லகு​வாக்​கும் எது​வும் கரு​வி​தான். குண்​டூசி முதல் விண்​வெளியை நோட்​ட​மிடும் தொலைநோக்கி வரைஅனைத்​துமே கருவி​கள்​தான். கருவி​களுக்​கும் நமக்​கு​மான உறவு மனிதர்​கள் நாகரி​கமடைவதற்கு முன்பே தொடங்கி​விட்​டது. மனிதர்​கள் மட்​டுமல்​லாது பூச்​சிகள், பறவை​கள், விலங்​கு​களும்​கூடக் கருவி​களின் துணை​யுடன் பல்​வேறு பணி​களை மேற்​கொள்​கின்​றன. நம்​முடைய நெருங்​கிய உறவு​களான குரங்​கு​கள் தேன் எடுக்​க​வும், ஒன்றை மற்​றொன்று தாக்​கிக்​கொள்​ள​வும் குச்​சிகளைப் பயன்​படுத்​துகின்​றன. அப்​படித்​தான் ஆதி​மனிதனும் கருவி​களைப் பயன்​படுத்​தத் தொடங்​கி​யிருக்க வேண்​டும்.

எந்த மனிதக்​குழு கருவி​களைப் புதி​தாக உரு​வாக்​கி​யும், பழைய கருவி​களைத் தொடர்ச்​சி​யாக மேம்​படுத்​தி​யும் பயன்​படுத்​துகிறதோ அதுவே உலகை ஆளும் வாய்ப்​பைப் பெறுகிறது. வரலாறு முழுக்க இதற்​கான ஆதா​ரங்​கள் குவிந்​து கிடக்​கின்​றன. எடுத்​துக்​காட்​டுக்​குக் கல்​வியை எடுத்​துக்​கொள்​வோம். கல்வி கற்​றவர்​களுக்கே காலங்​கால​மாகக் எண்​ணற்ற வாய்ப்​பு​கள் கிடைக்​கின்​றன. கல்வி கரு​வி​யா​வது அங்​கே​தான்.

மெய்​யுல​குக்​கும் மெய்​நிகர் உலகுக்​கு​மான இடைவெளி குறைந்​து​கொண்டே வரும் இன்​றைய சூழலில் இரண்டு உலகங்​களும் ஒன்​றோடு மற்​றொன்று பின்​னிப் பிணைந்து புதி​யதொரு வாழ்க்​கைப் பரப்பை நம்​முன் உரு​வாக்​கி​யுள்​ளன. ஆகவே கருவி​கள் எந்த உலகுக்​காக, நாட்​டுக்​காக, பயனாளர்​களுக்​காக உரு​வாக்​கப்​படு​கின்றன என்று விவா​திப்​ப​தை​விட, அவற்​றைப் பயன்​படுத்​தும் முறை​களைக் கற்​றறிந்து நம்​முடைய வாழ்க்​கை​யில் பயன்​படுத்​தலாம் என்​ப​தைச் சிந்​திப்​பதே சரி​யான வழி​முறை​யாக இருக்​கும்.

இன்று செய்​யறி​வுக் கருவி​கள் (Ai Tools) நம்​முடைய வாழ்க்​கை​யின் அங்​க​மாக மாறிவரு​வதைக் காண​முடிகிறது. மெய்​நிகர் உலகில் உரு​வாக்​கப்​படும் துறை​சார்ந்த செய்​யறி​வுக் கருவி​கள், அத்​துறை​யில் பல்​லாண்​டு​களாகச் செயல்​பட்​டு​வரும் நிபுணருக்கு இணை​யாகச் செயல்​படும் வாய்ப்பை அனை​வருக்​கும் வழங்​கு​கின்​றன. ஆகவே​தான் சமூக​விய​லா​ளர்​கள், ‘செய்​யறி​வில் வெல்​வோர், நாளைய உலகை வெல்​வார்’ என்​கிறார்​கள்.

சீனா​வுக்​கும் அமெரிக்கா​வுக்​கு​மான ஆதிக்​கப் போட்​டி​யில் செய்யறி​வுக் கருவி​கள் ஆயுத​மாக மாறி​யிருப்​ப​தைக் காணும்போது அக்​கூற்று உண்​மை​தான் எனத் தோன்​றுகிறது.

அமெரிக்க அதிபருக்கும் சீன அதிபருக்​கும் இடையே கடந்த செப்​டம்​பர் மாதம் நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யின்​போது, செய்​யறி​வுக்கருவி​கள் குறித்து நீண்​டநேரம் விவா​திக்​கப்​பட்​ட​தாகச் சர்​வ​தேச ஊடகங்​கள் பலவும் கூறுகின்​றன. நாடு​களே இத்​தகைய செய்​யறி​வுக் கருவி​களை உரு​வாக்​க​வும் பயன்​படுத்​த​வும் பேரார்​வம் காட்​டு​கின்றன எனும்​போது தனி​நபர்​கள் என்​னவெல்​லாம் செய்ய வேண்​டிய​திருக்​கும் எனும் கேள்வி நமக்கு எழு​வது இயற்​கை​தான்.

மனிதர்​கள் மேற்​கொள்​ளும் லட்​சக்​கணக்​கான தினசரி வேலைகளை எளி​தாக்​கும் செய்​யறி​வுக் கருவி​களை உரு​வாக்க பல பில்​லியன் டாலர்​களை அரசுகளும் நிறு​வனங்​களும் செல​விடு​கின்​றன. இவற்​றில் பல கருவி​கள் இலவச​மாகக் கிடைக்​கின்றன என்​கிற உண்மை வெகு சிலருக்கே தெரிந்​திருக்​கிறது.

ஏற்​கெனவே கணினித்​துறை சார்ந்த அறி​முக​மும் அனுபவ​மும் கொண்​டோர் இக்​கருவி​களைக் கற்​று, குறுகிய காலத்​தில் தங்​கள் நிலையை எளி​தாக உயர்த்​திக்​கொண்​டிருப்​ப​தை​யும் காண​முடிகிறது. அதே​நேரம், அக்​கருவி​களை அறி​யாதோர் அவர்​களு​டன் போட்​டி​யிட இயலாத சூழலும் இன்று நில​வு​கிறது. அது முறையல்ல. ஆபத்​தில்​லாத, பயன்​தரும் கருவி​களைக் கற்​றுக்​கொள்​வதற்​கும் பயன்​படுத்​து​வதற்​கு​மான உரிமை உலகில் உள்ள அனை​வரும் உண்​டு. சமவாய்ப்பு என நாம் கூறு​வது அதைத்​தான்.

எல்​லா​வற்​றை​யும்​விடச் செய்​யறிவோ மெய்​யறிவோ... அறிவு அனை​வருக்​கு​மானது அல்​ல​வா! செய்​யறி​வுக் கருவி​களின் பயன்​பாட்டை அனை​வருக்​கு​மான​தாக மாற்​றும் முயற்​சி​யின் ஒருபகு​தி​தான் இக்​கட்​டுரைத் தொடர். நமது அன்​றாட வாழ்க்​கைக்​குத் தேவைப்​படும் செய்​யறி​வுக் கருவி​களைப் பற்​றி​யும் அவற்றை எப்​படி​யெல்​லாம் பயன்​படுத்​தலாம் என்​பது குறித்​தும் வரப்​போகும் நாள்​களில் பார்ப்​போம்! செய்​யறிவு உலகுக்கு உங்​களை வரவேற்​கிறேன்!

- மேலும் கற்கலாம்.

ஆசிரியர் குறிப்பு: சரவணன் பார்த்​த​சா​ரதி

குற்​றங்​கள், நோய்​கள் உள்​ளிட்ட சமூகப் பிரச்​சினை​களைச் செயற்கை நுண்​ணறி​வின் துணை​யுடன் முன்​னறிவது தொடர்​பான ஆய்​வு​களை மேற்​கொண்​டு​வரும் ஆராய்ச்​சி​யாளர். ஆய்வு நிறு​வனம் ஒன்​றின் தலை​வ​ராக​வும் பேராசிரிய​ராக​வும் பணி​யாற்றி வரு​கிறார். இது​வரை பத்​துக்​கும் மேற்​பட்ட நூல்​களை எழு​தி​யுள்​ளதுடன் முப்​பதுக்​கும் மேற்​பட்ட நூல்​களை மொழி​யாக்​க​மும் செய்​துள்​ளார். இலக்​கி​யம், கல்​வி, வரலாறு, சுற்​றுச்​சூழல், அரசி​யல், அறி​வியல்​ புனை கதைகள்​ என இவரது படைப்​பு​கள்​ பல இதழ்​களிலும்​ வெளி​யாகியுள்​ளன.

செய்​யறி​வுக் கருவி​களும், சமவாய்ப்பும் | எளிதில் ஏஐ கற்கலாம் 1
நம் நினைவுகளையும் மாற்ற வல்லதா ஏஐ? - ஓர் ஆய்வும் ‘அதிர்ச்சி’ முடிவுகளும்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in