

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா போல்ட் என்1 ஸ்மார்ட்போனின் புதிய வேரியன்ட் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் ஸ்மார்ட்போன் மற்றும் ஃபீச்சர் போன் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.
அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா போல்ட் என்1 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகமாகி உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த போன் சந்தையில் விற்பனைக்கு வந்திருந்தது. அப்போது 4ஜிபி ரேம் உடன் இந்த போன் வெளிவந்தது. பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் பயனர்களுக்கு இந்த போன் சிறந்த தெருவிகளில் ஒன்றாக இருக்கும்.
லாவா போல்ட் என்1 சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
6.75 இன்ச் எல்சிடி டிஸ்பிளே
Unisoc T765 சிப்செட்
ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான
கேமரா
5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
4 / 6ஜிபி ரேம்
64 / 128ஜிபி ஸ்டோரேஜ்
5,000mAh பேட்டரி
18 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
5ஜி நெட்வொர்க்
இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது
6ஜிபி வேரியண்ட் மாடல் வரும் மே 1 முதல் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ.12,999 என அறிவிக்கப்பட்டுள்ளது
4ஜிபி வேரியண்ட் மாடல் போனின் விலை ரூ.7,499