தொலைக்காட்சிக்கு எதிர்காலம் உண்டா?

நவ.21 - உலகத் தொலைக்காட்சி நாள்
தொலைக்காட்சிக்கு எதிர்காலம் உண்டா?
Updated on: 
1 min read

எழுபதுகள், எண்பதுகளில் அனலாக் தொலைக்காட்சி ஆண்டெனாக்கள் மிகச் சில வீட்டுக்கூரைகளில் கொம்பு களாக நின்றன. பிறகு, செயற்கைக்கோள் ஒளிபரப்பு தன் எல்லையை விரித்தது. ஒவ்வோர் ஊரிலும் கேபிள் நெட்வொர்க், டிஷ் ஆண் டெனா, டிடிஎச் எனத் தொலைக்காட்சியைக் காணும்விதம் பல கிளைகள் விரித்தது; தற்போது இணையவழித் தொலைக்காட்சி, ஒடிடி என்று விண்ணுயர்ந்திருக்கிறது.

இந்தியாவில் 23 கோடி வீடுகளை, 90 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைத் தொலைக்காட்சி இணைத்திருக்கிறது. தற்போது 919 தனியார் சேனல்கள் உள்ளன. இதுவே, அந்த ஊடகத்தின் மவுசு குறைய வில்லை எனச் சொல்லும்.

டிஜிட்டல் மாற்றங்களால் இன்று ஒட்டு மொத்தத் தொலைக்காட்சிச் சூழலே மாற்றம் கண்டிருக்கிறது. தொலைக்காட்சிப் பெட்டிக்கு எதிரே குடும்பமாகத் திரண்ட காலம் இனி சாத்தியமில்லை. அதற்குப் பதிலாக, ஒவ்வொருவரும் தமக்கான கணினி, திறன்பேசி வழியாகத் தாங்கள் நினைத்த நேரத்தில் எந்தவோர் உள்ளடக்கத்தையும் பார்க்கிற நிலை பெருகியிருக்கிறது. டிஜிட்டல் நூலகங்களில் அவற்றைச் சேமிக்கிற வசதிகளும் வந்திருக்கின்றன.

யூடியூப், ஒடிடி தளங்கள், செயலிகள் என டிஜிட்டல் ஊடகங்களின் உள்ளடக்கத்திற் கான வரவேற்பு மிகப் பெரியதாகியிருக்கிறது. கிடைமட்டச் செவ்வக வடிவிலேயே திரையைக் கண்ட காலம் போய், இப்போது செங்குத்துச் சட்டகத்தில் படம் பார்ப்பதும் துளிர்விட்டிருக்கிறது.

வருங்காலத்தில், செயற்கை நுண்ணறி வின் உதவியோடு பயனர்களின் அனுபவங் களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிற வகையிலான உள்ளடக்கங்கள் அதிகரிக்கலாம். பார்வையாளரை ஊக்கப்படுத்து வதாக, வழிகாட்டுவதாக, அவை அமையலாம். அவர்களோடு உறவாடுவதாக, உள்ளடக்கம் பல வடிவங்கள் எடுக்கலாம். மாறிவரும் மக்களின் மனநிலைக்கேற்ப இருப்பதாக மட்டுமல்லாமல், அந்தப் பொறுப்புக்குத் தகுதியான வகையிலும் தொலைக்காட்சி உள்ளடக்கங்கள் இருந்தாக வேண்டும். இப்போதிருப்பதுபோல நேர்மையோடும் நம்பகத்தன்மையோடும் காட்சி ஊடகத்தின் செயல்பாடுகள் தொடர வேண்டும்.

- மாபா

தொலைக்காட்சிக்கு எதிர்காலம் உண்டா?
காசி தமிழ்ச் சங்கமத்தில் விஜய் பங்கேற்க வேண்டும்: மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அழைப்பு

X