iQOO Z11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

iQOO Z11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Z11 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். அவ்வப்போது ஸ்மார்ட்போன் பயனர்களை கவரும் வகையில் புதிய மாடல் போன்களை சந்தையில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் iQOO Z11 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

கடந்த மாதம் iQOO Z11 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருந்தது. தற்போது iQOO Z11 வெளியாகி உள்ளது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. மிட் ரேஞ்ச் விலையில் வெளிவந்துள்ள இந்த போனில் Curved டிஸ்பிளே உள்ளது.

iQOO Z11 ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

>> 6.83 இன்ச் AMOLED டிஸ்பிளே

>> மீடியாடெக் டிமான்சிட்டி 7500 டர்போ சிப்செட்

>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

>> 6, 8, 12 ஜிபி ரேம்

>> 128, 256 ஜிபி ஸ்டோரேஜ்

>> 50 + 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள கேமரா

>> 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

>> 7,050 mAh பேட்டரி

>> 44 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் அம்சம்

>> ரிவர்ஸ் சார்ஜிங் வசதி

>> 5ஜி நெட்வொர்க்

>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்

>> மூன்று ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட்

>> வரும் 25-ம் தேதி முதல் இந்த போனின் சந்தை விற்பனை தொடங்குகிறது

>> இதன் விலை ரூ.34,999 முதல் தொடங்குகிறது.

iQOO Z11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இலங்​கைக்கு எதி​ரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்​டி​யில் இந்​திய அணி அபார வெற்றி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in