Google Pixel 11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

Google Pixel 11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

கடந்த 2016 முதல் கூகுள் பிக்சல் போன்களை கூகுள் நிறுவனம் தயாரித்து சந்தையில் விற்பனை செய்து வருகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இந்த போன்கள் இயங்குகின்றன. ஆண்டுதோறும் புதிய மாடல் ‘கூகுள் பிக்சல்’ போன்களை சந்தையில் கூகுள் நிறுவனம் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது கூகுள் பிக்சல் 11 சீரிஸ் போன்கள் இந்தியா உட்பட சர்வதேச சந்தையில் அறிமுகமாகி உள்ளது. பிக்சல் 11, பிக்சல் 11 புரோ, பிக்சல் புரோ எக்ஸ்எல், பிக்சல் 11 புரோ ஃபோல்ட், பிக்சல் வாட்ச் 5 உள்ளிட்ட சாதனங்கள் இப்போது அறிமுகமாகி உள்ளது.

பிக்சல் 11 ஸ்மார்ட்போன்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

>> 6.3 இன்ச் OLED டிஸ்பிளே

>> கூகுள் டென்சர் ஜி6 சிப்செட்

>> ஆண்ட்ராய்டு 17 இயங்குதளம்

>> 12 ஜிபி ரேம்

>> 256, 512 ஜிபி ஸ்டோரேஜ்

>> 10.5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

>> 48 + 13 + 10.8 மெகாபிக்சல் என மூன்று கேமரா பின்பக்கம் உள்ளது

>> 4,985mAh பேட்டரி

>> 30 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

>> ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்

>> வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்

>> 5ஜி நெட்வொர்க்

>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்

>> நான்கு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

>> இதன் விலை ரூ.89,999 முதல் தொடங்குகிறது

Google Pixel 11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
“நீங்கள் இல்லாமல் என்ன செய்யப்போகிறேன்” - தந்தையின் நினைவுகளை பகிர்ந்த மெஸ்ஸி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in