டெல்லி ஏஐ மாநாடு: கைகோக்க மறுத்த ‘இருவர்’ முதல் சீன ரோபோ நாய் சர்ச்சை வரை

டெல்லி ஏஐ மாநாடு: கைகோக்க மறுத்த ‘இருவர்’ முதல் சீன ரோபோ நாய் சர்ச்சை வரை
Updated on
1 min read

மாநாட்டில் கைகோக்க மறுத்த ஆல்ட்மேன், அமோடி

டெல்லி ஏஐ உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி, முன்னணி நிறுவனங்களின் சிஇஓக்கள், விழா மேடையில் ஒன்றாக கைகோத்தனர்.

அப்போது அமெரிக்காவை சேர்ந்த ஓபன் ஏஐ தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், ஆந்த்ரோபிக் தலைமை செயல் அதிகாரி டாரியோ அமோடி ஆகியோர் தொழில் போட்டி பகைமை காரணமாக கைகோக்க மறுத்துவிட்டனர்.

விழா மேடையில் இருவரும் கைகோக்க மறுத்து, கைகளை மட்டும் உயர்த்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பறக்​கும் டாக்ஸி தயாரிப்​பில் என்​விடியா - இபிளேன்

பறக்​கும் டாக்சி தயாரிப்​பில் என்​விடியா நிறு​வனத்​துடன் இணைந்து பணி​யாற்ற உள்​ள​தாக இபிளேன் நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. சென்னை ஐஐடி-​யில் கடந்த 2019-ல் தொடங்​கப்​பட்ட ஸ்டார்ட்​-அப் நிறு​வனம் இபிளேன்.

பேராசிரியர் சத்யா சக்​கர​வர்த்​தி​யால் தொடங்​கப்​பட்ட இந்த நிறு​வனம், செங்​குத்து டேக்​-ஆஃப் மற்​றும் லேண்​டிங் (eVTOL) விமானங்​களை (ஏர் டாக்​ஸி) உரு​வாக்​கும் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளது. மின்​சா​ரத்​தில் இயங்​கக் கூடிய இந்த ஏர்டாக்​ஸி​யில் 2 பேர் முதல் 4 பேர் வரை அமர்ந்து செல்ல முடி​யும். நகர்ப்​புற போக்​கு​வரத்து நெரிசலை தவிர்த்து குறுகிய நேரத்​தில் பயணிக்க முடி​யும்.

சீன ரோபோ நாய் சர்ச்சையான நிலையில் மன்னிப்பு கோரிய கல்கோடியாஸ் பல்கலை.

டெல்​லி​யில் ஏஐ உச்சி மாநாடு நடை​பெற்று வரு​கிறது. இதில், கிரேட்​டர் நொய்​டாவைச் சேர்ந்த கல்​கோடி​யாஸ் பல்​கலைக்​கழகம் அரங்கு அமைத்​திருந்​தது. அதில், நேற்று முன்​தினம் ‘ஓரி​யான்’ என்ற ரோபோ நாய், காட்​சிக்கு வைக்​கப்​பட்​டிருந்​தது.

அது தங்​கள் பல்​கலைக்​கழகத்​தில் உருவாக்​கப்​பட்​டது என்று கூறிய பேராசிரியர் நேகா சிங், அதன் செயல்பாடுகளை விளக்​கிக் கூறி​னார். ஆனால், அது சீனாவில் ‘யூனிட்ரீ ரோபாட்​டிக்​ஸ்’ நிறு​வனத்​தால் தயாரிக்கப்​பட்​டது என தெரிய வந்​தது.

இந்த தகவல் வெளியானதும் கண்​காட்சி அரங்​கி​லிருந்து கல்​கோடி​யாஸ் பல்​கலைக்​கழகம் வெளியேற்றப்பட்டது. கல்​கோடி​யாஸ் பல்​கலைக்​கழகம் வெளி​யிட்ட அறிக்கையில், “ஓரி​யான் ரோபோ நாய் எங்​கள் தயாரிப்பு அல்ல.

பேராசிரியர் நேகா சிங் கேமரா முன்​னால் இருந்த ஆர்​வத்​தில் தவறான தகவலைக் கூறி​விட்​டார். இதற்​காக மன்​னிப்பு கோரு​கிறோம்” என்று விளக்​கம் அளித்​துள்​ளது. இதற்கிடையில், தான் வேலை தேடு​வதாக நேகா வெளியிட்ட பதிவு வைரலாகி உள்ளது.

டெல்லி ஏஐ மாநாடு: கைகோக்க மறுத்த ‘இருவர்’ முதல் சீன ரோபோ நாய் சர்ச்சை வரை
“ஏஐ துறையில் இந்தியா பார்ப்பது அச்சத்தை அல்ல... எதிர்காலத்தையே!” - பிரதமர் மோடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in