இந்திய ஐ.டி. சேவைகளை ஏஐ சீர்குலைக்காது: தொழில்நுட்ப துறை அமைப்பான நாஸ்காம் தகவல்

இந்திய ஐ.டி. சேவைகளை ஏஐ சீர்குலைக்காது: தொழில்நுட்ப துறை அமைப்பான நாஸ்காம் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: செயற்கை நுண்​ணறிவால் (ஏஐ) இந்​திய தொழில்​நுட்ப (ஐ.டி.) சேவை துறை பாதிக்கும் என்ற கருத்து நில​வு​கிறது. இதுகுறித்து தொழில்​நுட்ப துறை அமைப்​பான நாஸ்​காம் கூறிய​தாவது:

இந்​திய தொழில்​நுட்ப சேவை​களை ஏஐ சீர்​குலைக்​காது. இத்​துறை​யின் செயல்​பாட்​டை​யும், பங்​களிப்​பை​யும் ஏஐ மறுசீரமைத்து மேம்​படுத்​தும். ஆந்த்​ரோபிக்​கின் ‘கிளாட் கோவர்க்' போன்ற புதிய ஏஐ உபகரணங்​கள், பல்​வேறு பணி​களை தானி​யங்கி முறை​யில் செயல்பட வைக்​கும். ஆனால், இந்​திய ஐ.டி. சேவை​களை அது புறக்​கணிக்​காது. மாறாக அவற்​றின் திறன்​களை ஏஐ உபகரணங்​கள் மேம்​படுத்​தும்.

சட்​டம், விற்​பனை, மார்க்​கெட்​டிங் மற்​றும் தரவு பகுப்​பாய்வு போன்ற துறை​களில் பணி​களைத் தானி​யங்கி முறை​யில் செயல்பட வைக்​கும் ஏஐ கருவி​களால் இந்​தி​யா​வின் ஐ.டி. சேவை துறைக்கு பாதிப்பு ஏற்​படும் என்ற கவலைகள் தவறானவை. சிக்​கலான தொழில்​நுட்ப சூழல்​களு​டன் செயல்​படும் உலகளா​விய நிறு​வனங்​களு​டன் இந்​திய ஐ.டி. சேவை நிறு​வனங்​கள் இணைந்து பணி​யாற்​றுகின்​றன.

காலத்​துக்கு ஏற்ப முன்​னேறு​வதற்​கு, இந்​திய ஐ.டி.நிறு​வனங்​கள் தங்​களை மறுசீரமைக்​கும் பணியை ஏற்​கெனவே தொடங்​கி​விட்​டன. அதனால் ஏஐ வரவு ஐ.டி. துறையை சீர்​குலைக்​கும் என்ற கவலை தேவையற்​றது. இவ்​வாறு நாஸ்​காம்​ தெரி​வித்​துள்​ளது.

இந்திய ஐ.டி. சேவைகளை ஏஐ சீர்குலைக்காது: தொழில்நுட்ப துறை அமைப்பான நாஸ்காம் தகவல்
எப்ஸ்டீன் தொடர்பான பாலியல் வன்கொடுமையில் அனில் அம்பானி பெயர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in