எப்ஸ்டீன் தொடர்பான பாலியல் வன்கொடுமையில் அனில் அம்பானி பெயர்!

அனில் அம்பானி, ஜெப்ரி எப்​ஸ்​டீன்

அனில் அம்பானி, ஜெப்ரி எப்​ஸ்​டீன்

Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரை சேர்ந்த பிரபல தொழில​திபர் ஜெப்ரி எப்​ஸ்​டீன். புளோரிடா மாகாணம், பாம் பீச் பகு​தி​யில் இருந்த அவருக்குச் சொந்தமான பண்ணை வீடு​களில் சிறுமிகள் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​ட​தாக கடந்த 2005-ம் ஆண்​டில் புகார்​கள் எழுந்​தன.

இதுதொடர்​பான வழக்​கில் ஜெப்ரிக்கு 13 மாதங்​கள் சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டது. சிறை​யில் இருந்து அவர் வெளியே வந்த பிறகும் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்​கில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை​யில் அவர் மீண்​டும் கைது செய்​யப்​பட்​டார். கடந்த 2019 ஆகஸ்ட் 10-ம் தேதி மான்​ஹாட்​டன் சிறை​யில் அவர் தற்​கொலை செய்து கொண்​டார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல்​வேறு உலக நாடு​களின் தலை​வர்​கள், அமெரிக்​கா​வின் முன்​னணி தொழில​திபர்​களுக்கு எப்​ஸ்​டீனுடன் நெருங்​கிய தொடர்பு இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது. இவை தொடர்​பான ஆவணங்​கள், புகைப்​படங்​கள், வீடியோக்​கள் அவ்​வப்​போது வெளி​யாகி அதிர்​வலைகளை ஏற்​படுத்தி வரு​கின்​றன.

இந்த சூழலில் ஜெப்ரி தொடர்​பான பாலியல் வன்​கொடுமை விவ​காரத்​தில் இந்​திய தொழில​திபர் அனில் அம்​பானி​யின் பெயரும் உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. கடந்த 2017, 2019-ம் ஆண்​டு​களில் அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகருக்கு அனில் சென்​றார். அப்​போது மான்​ஹாட்​டனில் உள்ள ஜெப்ரி​யின் வீட்​டுக்​கும் அவர் சென்​றுள்​ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி ஜெப்ரி மற்​றும் அனில் இடையே நடை​பெற்ற தகவல் பரி​மாற்​றத்தை அமெரிக்க ஊடகம் வெளி​யிட்​டுள்​ளது. “எனக்​கான உங்​களின் (ஜெப்ரி) பரிந்​துரை என்ன’’ என்று அனில் கேள்வி எழுப்ப அதற்கு ஜெப்ரி “உங்​களுக்கு உயர​மான சுவீடன் பெண் பொருத்​த​மாக இருப்​பார்’’ என்று ஜெப்ரி பரிந்​துரைக்க, ‘‘உடனடி​யாக ஏற்​பாடு செய்​யுங்​கள்’’ என்று அனில் பதில்​ அளித்​திருக்​கிறார்​.

<div class="paragraphs"><p>அனில் அம்பானி,&nbsp;ஜெப்ரி எப்​ஸ்​டீன்</p></div>
‘ஆக்கிரமிப்பு காஷ்மீர், அக்சாய் சின் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி’ - புதிய வரைபடம் வெளியிட்டது அமெரிக்கா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in