

கசிந்த ரகசியம்
மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 10 இயங்குதளம் பற்றிய ரகசியங்கள் இணையத்தில் உலவ ஆரம்பித்துள்ளன. இந்த இயங்குதளத்துடன் X-box கேம்ஸ் அப்ளிகேஷன் இணைந்திருக்குமாம். இது மட்டுமன்றி, cortana எனப்படும் வீடியோ கேம் அப்ளிகேஷனும் விண்டோஸ் 10-ல் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேல், இனி மினிமைஸ், மேக்ஸிமைஸ் தொல்லையும் இருக்கா தாம். டெஸ்க்டாப்பில் dragging முறைப்படி ஒரே நேரத்தில் 4 திரைகளை கையாளும் வசதி இதில் இடம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
நானோ கூண்டு
கிளிகளையும் புலிகளையும் அடைக்க கூண்டுகள் உள்ளன. அதேபோல நானோ துகள்களை சுத்திகரிப்பதற்காக நானோ கூண்டு ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர் இங்கிலாந்தின் அல்பாமா பல்கலைக்கழக வேதியியல் மாணவர்கள்.
X-Ray, MRI Scan போன்ற ஒளி சார்ந்த மருத் துவமுறைகளில் தடங்களை கண்டறிய பெரிதும் உதவுவது ஃபுல்லரின் என்னும் நானோ துகள். கார்பனில் இருந்து பிரியும் இந்த நானோ துகள், இயல்பில் நச்சுத்தன்மைக் கொண்டது. இதனை சுத்திகரிக்க, மிக மிக நுண்ணிய பஞ்சு போன்ற நானோ கூட்டினை அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மூளைக்குத் தீனி
உடல் நலத்தைப் பேண எத்தனையோ ஃபிட்னஸ் டிப்ஸ்கள் மொபைல் அப்ளிகேஷன்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் மூளைக்கு தீனி போடுவதற்கு ஒரு சில அப்ளிகேஷன்கள் மட்டுமே உள்ளன. அந்த விதத்தில் புதிதாக வந்துள்ளது ‘ஹெல்த் ஐக்யூ’ என்னும் அப்ளிகேஷன்.
இந்த அப்ளிகேஷனில் பல்வேறு தறைகளை சேர்ந்த 10,000 கேள்விகள் உள்ளன. நாம் நமக்கு தொடர்புடைய துறை ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம். இப்படி தேர்வு செய்யும்போது, அந்தத் துறை சார்ந்த நமது பொது அறிவை சோதிக்கும் நோக்கில் ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்படும். இதற்கு தனியே ஸ்கோர் போர்டும் உண்டு. இதன் மூலம் துறை சார்ந்த தெரியாத பல விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.