உங்கள் கணினியில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி?

உங்கள் கணினியில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி?
Updated on
2 min read

வாட்ஸ் ஆப் செயலியை மொபைல்களில் மட்டுமல்லாது இனி கணினியிலும் பயன்படுத்தலாம்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப் செயலி அனைத்து விதமான மொபைல் ஃபோன்களிலும் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறுந்தகவல்களோடு, புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், குரல் பதிவுகள் என பலவற்றை வாட்ஸ் ஆப் மூலம் பகிரமுடியும்.

இந்தச் செயலியை மொபைல்களில் பயன்படுத்தும் அதே வேளையில் கணினியிலும் பயன்படுத்த பல பயனர்கள் ஏற்கனவே ஆர்வம் தெரிவித்திருந்தனர்.

தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் இதற்கேற்றார் போல, கணினியில் க்ரோம் ப்ரவுசரில் (Chrome) வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கணினியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவது எப்படி?

1. முதலில் மொபைலில் இருக்கும் வாட்ஸ் ஆப் செயலியை மேம்படுத்த (update) வேண்டும்

2. அடுத்து, கணினியில், க்ரோம் ப்ரவுசரில் >https://web.whatsapp.com என்ற பக்கத்திற்கு செல்லவும். அந்த பக்கத்தில், ஒரு கியூ ஆர் கோட் (QR code) காண்பிக்கப்படும்.

3. உங்கள் மொபைலில், வாட்ஸ் ஆப் செயலியை இயக்கி, அதில் மெனுவிற்கு செல்லவும்.

4. மெனுவில் whatsapp web என்ற தேர்வுக்குச் செல்லவும்.

5. கணினி திரையில் இருக்கும் கியூ ஆர் கோடினை (QR Code) மொபைலால் ஸ்கேன் செய்யவும் (உங்கள் மொபைலில் இன்டர்நெட் இணைப்பு செயல்படவேண்டும்)

6. ஸ்கேன் செய்து முடித்தவுடன் தானாக கணினி திரையில் உங்கள் வாட்ஸ் ஆப் பக்கம் தோன்றும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in