

ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் டிக்டாக் தடையோடு இந்தப் புத்தாண்டு பிறந்திருக்கிறது. டிக்டாக் பயன்பாடு பல நாடுகளில் பிரச்சினைக்குரியதாக இருப்பதுபோல, அல்பேனியாவிலும் இருக்கிறது. அண்மையில் 14 வயது மாணவர் ஒருவர், சக மாணவரால் குத்திக் கொல்லப்பட்டார். டிக்டாக் தளத்தில் வாக்குவாதமாக வெடித்து வளர்ந்த மோதலே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. விரிவான விசாரணைக்குப் பிறகு டிக்டாக் சேவைக்குத் தடை விதிக்க முடிவானது. “ஓராண்டுக்கு டிக்டாக்கைத் தடை செய்கிறோம். அல்பேனியாவில் டிக்டாக் இருக்காது” என அல்பேனிய அரசு அறிவித்துள்ளது.