Published : 24 Apr 2024 10:52 PM
Last Updated : 24 Apr 2024 10:52 PM

ரியல்மி நார்சோ 70 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

ரியல்மி நார்சோ 70 5ஜி ஸ்மார்ட்போன்

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நார்சோ 70 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது.

ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. பிரீமியம் விலையிலான போன்களையும் விற்பனை செய்து வருகிறது. தற்போது ரியல்மி நார்சோ பிராண்டின் கீழ் நார்சோ 70 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 7050 5ஜி சிப்செட்
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ள பிரதான கேமரா
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5,000mAh பேட்டரி
  • 45 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
  • 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
  • 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
  • 5ஜி நெட்வொர்க்
  • இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • இதன் விலை ரூ.14,999 முதல் தொடங்குகிறது
  • விலையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது
  • இந்த போனுடன் நார்சோ 70எக்ஸ் மாடலும் அறிமுகமாகி உள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x