‘யூடியூப் கிரியேட்’ - வீடியோக்களை மொபைல் போனில் எடிட் செய்ய உதவும் செயலி

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: மொபைல் போன் பயனர்கள் தங்களது கைவசம் உள்ள வீடியோக்களை தரமான வகையில் எடிட் செய்ய உதவுகிறது யூடியூப் கிரியேட் ஆப் எனும் செயலி. சந்தா கட்டணம் ஏதுமின்றி இயங்கும் இந்த செயலியை யூடியூப் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

கிரியேட்டர்களை டார்கெட் செய்து கடந்த ஆண்டு இந்த செயலியை யூடியூப் அறிமுகம் செய்தது. இப்போது இந்தியா உட்பட 13 நாடுகளுக்கு இதன் சேவையை விரிவு செய்துள்ளது. இந்த செயலி இப்போதைக்கு பீட்டா வெர்ஷனாக இயங்கி வருகிறது. உலக அளவில் உள்ள பயனர்களின் கருத்துகளை பெற்று இது மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை பயன்படுத்தி பயனர்கள் எளிய முறையில் வீடியோக்களை எடிட் செய்யலாம் என யூடியூப் நம்புகிறது. தொழில்முறை வீடியோ எடிட்டிங் பணியில் உள்ள சவால்கள் இதில் பயனர்களுக்கு இருக்காது எனவும் தெரிவித்துள்ளது. குறைந்த நேரத்தில் வீடியோக்களை பயனர்கள் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப மொபைல் போன் வழியே இதில் எடிட் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.

ஷார்ட் மற்றும் லாங் ஃபார்ம் வீடியோ என அனைத்தையும் இதில் எடிட் செய்யலாம். இந்த செயலியின் மூலம் பயனர்கள் தங்கள் வசம் உள்ள வீடியோவை எடிட் செய்யலாம். ஆடியோ ஃபைல்களை சேர்ப்பது, ஃபில்டர் மற்றும் எஃபெக்ட்களை சேர்ப்பது, ஆடியோவில் உள்ள நாய்ஸினை (சப்தம்) அகற்றுவது, அதை தங்களுக்கு வேண்டிய வடிவில் 1080P அல்லது 720P வடிவில் டவுன்லோட் செய்து கொள்ளவும் முடியும். கூடவே யூடியூபிலும் அப்டேட் செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in