ரியல்மி 12+ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

ரியல்மி 12+ 5ஜி ஸ்மார்ட்போன்
ரியல்மி 12+ 5ஜி ஸ்மார்ட்போன்
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 12 சீரிஸ் போன்களின் வரிசையில் ரியல்மி 12+ மற்றும் ரியல்மி 12 அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது.

ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. பிரீமியம் விலையிலான போன்களையும் விற்பனை செய்து வருகிறது. தற்போது ரியல்மி 12+ மற்றும் ரியல்மி 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

ரியல்மி 12+ சிறப்பு அம்சங்கள்

  • 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 7050 5ஜி சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • 8ஜிபி ரேம்
  • 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • 50MP SONY LYT-600 மெயின் கேமரா
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5ஜி நெட்வொர்க்
  • 5,000mAh பேட்டரி
  • 67 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
  • மூன்று ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி மற்றும் சாஃப்ட்வேர் அப்டேட் வழங்கப்படும்
  • இந்த போனின் ஆரம்ப விலை ரூ.20,999

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in