சேலம்: கூலமேடு ஜல்​லிக்​கட்​டு போட்டியில் காளை​களை அடக்​கிய இளைஞர்​கள்!

சேலம்: கூலமேடு ஜல்​லிக்​கட்​டு போட்டியில் காளை​களை அடக்​கிய இளைஞர்​கள்!
Updated on
1 min read

சேலம் / நாமக்​கல்: கூலமேட்​டில் நடந்த ஜல்​லிக்​கட்​டுப் போட்​டி​யில் சீறிப் பாய்ந்த காளை​களை இளைஞர்​கள் போட்டி போட்​டுக் கொண்டு அடக்​கினர்.

சேலம் மாவட்டம் ஆத்​தூர் அருகேயுள்ள கூலமேட்டில் நேற்று நடந்த ஜல்​லிக்​கட்​டுப் போட்​டியை எம்​.பி.க்​கள் எஸ்​.ஆர்​.சிவலிங்​கம், மலை​யரசன் தொடங்​கி​வைத்​தனர். முன்​ன​தாக, மாவட்ட வரு​வாய் அலு​வலர் ரவிக்​கு​மார் தலை​மை​யில் மாடு​பிடி வீரர்​கள் உறு​தி​மொழி ஏற்​றனர். தொடர்ந்து, 460 காளை​கள் களமிறங்​கின. 300-க்​கும் மேற்​பட்ட மாடு​பிடி வீரர்​கள், சீறிப்​பாய்ந்த காளை​களை அடக்​கினர்.

தொடர்ந்​து, காளை​களை அடக்​கிய வீரர்​கள் மற்​றும் பிடிப​டாத காளை​களின் உரிமை​யாளர்​களுக்கு பீரோ, கட்​டில், சைக்​கிள், குக்​கர், வெள்​ளிக் காசு உள்​ளிட்ட பரிசுகள் வழங்​கப்​பட்​டன.

வட்​டாட்​சி​யர் தமிழ்​மணி, கால்​நடை பராமரிப்​புத் துறை இணை இயக்​குநர் அரங்க பிர​காசம் மற்​றும் ஆயிரக்​கணக்​கானோர் ஜல்​லிக்​கட்டை கண்டு ரசித்​தனர். எஸ்​.பி. கவுதம் கோயல் தலை​மை​யில் பலத்த போலீஸ் பாது​காப்பு ஏற்​பாடுகள் செய்​யப்​பட்​டிருந்​தன.

எரு​மப்​பட்​டி​யில்​… நாமக்​கல் அடுத்த எரு​மப்​பட்​டி​யில் நடந்த ஜல்​லிக்​கட்​டுப் போட்​டி​யில் 542 காளை​கள் களமிறக்​கப்​பட்​டன. எம்.பி. ராஜேஸ்​கு​மார் போட்​டியை தொடங்​கி​வைத்​தார். 350-க்​கும் மேற்​பட்ட வீரர்​கள் போட்​டி​யில் பங்​கேற்​றனர்.

வாடி​வாசல் வழி​யாக சீறிப்​பாய்ந்து வந்த காளை​களை, மாடு​பிடி வீரர்​கள் தாவிப் பிடித்து அடக்க முற்​பட்​டனர். எனினும், வீரர்​களின் பிடி​யில் சிக்​காமல் காளை​கள் லாவக​மாக தப்​பின. சில காளை​களை வீரர்​களால் பிடிக்க இயல​வில்​லை. எனினும், பல காளை​களின் திமில்​களைப் பிடித்து மாடு​பிடி வீரர்​கள் வெற்றி வாகை சூடினர்.​ வெற்றி பெற்​றவர்​களுக்​கும், பிடிப​டாத காளை​களின் உரிமை​யாளர்​களுக்​கும் பரிசுகள் வழங்​கப்​பட்​டன. காளை​கள் முட்​டிய​தில் 23 பேர் காயமடைந்​தனர்.

சேலம்: கூலமேடு ஜல்​லிக்​கட்​டு போட்டியில் காளை​களை அடக்​கிய இளைஞர்​கள்!
தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in