நத்தம்: திமுக எம்எல்ஏ மகனுக்கு சொந்தமான குவாரியில் மர்மமாக உயிரிழந்த இளைஞர்

விசாரணை நடத்த தலைவர்கள் வலியுறுத்தல்
உயிரிழப்பு சம்பவம் நடை பெற்ற சரளைப்பட்டி கல் குவாரி.

உயிரிழப்பு சம்பவம் நடை பெற்ற சரளைப்பட்டி கல் குவாரி.

Updated on
1 min read

திண்டுக்கல்: ​திண்​டுக்​கல் மாவட்​டம் நத்​தம் அருகே சரளைபட்​டி​யில் உள்ள ஸ்ரீரங்​கம் திமுக எம்​எல்ஏ பழனி​யாண்​டி​யின் மகனுக்​குச் சொந்​த​மான குவாரி​யில் இளைஞர் உடல் மீட்​கப்​பட்​டது.

இது குறித்து உரிய விசா​ரணை நடத்​து​மாறு அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி உள்​ளிட்​டோர் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். நத்​தம் அருகே சரளைப்​பட்​டி​யில் ஸ்ரீரங்​கம் திமுக எம்​எல்ஏ பழனி​யாண்​டி​யின் மகன் விஜய​பார​திக்கு சொந்​த​மான கல் குவாரி உள்​ளது.

சரளைப்​பட்​டியைச் சேர்ந்தவர் கருப்​ப​சாமி (25). தாய், தந்தை இல்​லாமல் உறவினர் பராமரிப்​பில் வசித்து வந்​தார். இவர் மனநலம் பாதிக்​கப்​பட்ட நிலை​யில், குவாரி பகு​தி​யில் சுற்​றித் திரிந்து வந்​துள்​ளார். வாய்​பேச முடி​யாத நிலை​யிலும் அடிக்​கடி குவாரி பகு​திக்​குச் சென்று வடமாநிலத் தொழிலா​ளர்​களு​டன் பழகி வந்​துள்​ளார்.

இந்​நிலை​யில் கருப்​ப​சாமியை கடந்த 10 நாட்​களாக காண​வில்​லை. உறவினர்​கள் பல இடங்​களில் தேடி​யும் கண்​டு​பிடிக்க முடிய​வில்​லை. நேற்​று​ முன்​தினம் ஞாயிற்​றுகிழமை குவாரி​யில் சுமார் 10 அடி பள்​ளத்​தில் கருப்​ப​சாமி உடல் அழுகிய நிலை​யில் கிடந்​துள்​ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த கருப்​ப​சாமி​யின் உறவினர்​கள் குவாரியை முற்​றுகை​யிட்​டனர். இவர்​களு​டன் நாம் தமிழர் கட்​சி​யினரும் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

திண்​டுக்​கல் புறநகர் டிஎஸ்பி சங்​கர் மற்​றும் போலீ​ஸார் கருப்​ப​சாமி​யின் உடலைக் கைப்​பற்​றி, திண்​டுக்​கல் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்​தனர்.

இது தொடர்​பாக நத்​தம் போலீ​ஸார் சந்​தேக மரணம் என வழக்​குப் பதிவு செய்​து, நேற்று பிரேதப் பரிசோதனை முடிந்து உறவினர்​களிடம் உடலை ஒப்​படைத்தனர்.

வலி​யுறுத்​தல்

இதனிடையே இந்த உயி​ரிழப்பு குறித்து உரிய விசா​ரணை நடத்த தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: ஸ்ரீரங்​கம் திமுக எம்​எல்ஏ பழனி​யாண்​டி​யின் மகன் விஜய​பார​திக்கு சொந்​த​மான குவாரி ஒன்​றில், இளைஞர் கருப்​ப​சாமி சடல​மாக மீட்​கப்​பட்​டுள்​ள​தாக செய்​தி​கள் வரு​கின்​றன.

ஏற்​கெனவே, தனக்கு சொந்​த​மான குவாரி​யில் சட்​ட​விரோத நடவடிக்கை இருப்​ப​தாக வந்த குற்​றச்​சாட்டு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்​தி​யாளர் மற்​றும் கேம​ராமேன் மீது கொலை​வெறி தாக்​குதல் நடத்​தி, தனது ஆளுங்​கட்சி பலத்​தால் மறைக்க முயன்​றவர்தான் இந்த பழனி​யாண்​டி.

மறு​படி​யும் அவர் மகனுக்கு சொந்​த​மான குவாரி​யில் சடலம் கிடைத்​திருப்​பது பொதுமக்கள் மத்தியில் பல்​வேறு கேள்வி​களை எழுப்​பு​கிறது. இது குறித்து சட்​டப்​பூர்​வ​மாக விசா​ரித்து நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி: கல்​கு​வாரி​யில் உயிரற்ற நிலை​யில் கண்​டெடுக்​கப்​பட்ட இளைஞர் கொலை செய்​யப்​பட்​டா​ரா. அதன் பின்​னணி​யில் வேறு சதித்​திட்​டங்​கள் ஏதும் உள்​ளனவா என்​பது குறித்​து விரி​வான வி​சா​ரணை நடத்​த அரசு ஆணை​யிட வேண்​டும்​.

<div class="paragraphs"><p>உயிரிழப்பு சம்பவம் நடை பெற்ற சரளைப்பட்டி கல் குவாரி.</p></div>
மார்ச் 4-ல் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்தபோது விபத்தில் சிக்கிய மாணவர் மருத்துவமனையில் மரணம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in